ஜான் பால்டுவின் அரசு கழக ஆய்வுறுப்பினர் | |
---|---|
![]() பேரா. ஜான் பால்டுவின், கேவண்டிழ்சு ஆய்வகம் | |
பிறப்பு | இலிவர்பூல், ஐக்கிய இராச்சியம் | 6 திசம்பர் 1931
இறப்பு | 7 திசம்பர் 2010 | (அகவை 79)
தேசியம் | பிரித்தானியர் |
துறை | வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | அரசிக் கல்லூரி, கேம்பிரிட்ஜ் |
ஆய்வேடு | பெரிய கோண அளவு அண்டக் கதிர்வீச்சு வாயில்களின் ஆய்வு (1956) |
ஆய்வு நெறியாளர் | மார்ட்டின் இரைல் |
அறியப்படுவது | கேம்பிரிட்ஜ ஒளியியல் பொருள்வில்லைத் தொகுப்புத் தொலைநோக்கி பொருள்வில்லை மறைக்கும் குறுக்கீட்டளவி |
விருதுகள் | ஜாக்சன் குவில்ட்டுப் பதக்கம் |
துணைவர் | ஜாய்சு காக்சு |
ஜான் எவான் பால்டுவின் (John Evan Baldwin) (6 திசம்பர் 1931 – 7 திசம்பர் 2010) ஒரு பிரித்தானிய வானியலாளரும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்.[1] இவர் 1954 இல் இருந்து கேவண்டிழ்சு வானியற்பியல் குழுவில் பணிபுரிந்தார். [2] முன்பு இது முல்லார்டு கதிர்வீச்சு வான்காணகம் என அழைக்கப்பட்டதாகும். இவர் கதிர்வீச்சு வானியலில் வானியல்வகை குறுக்கீட்டளவியை வடிவமைப்பதில் பாத்திரம் வகித்துள்ளார். பின்னர், வானியல் ஒளியியல் குறுக்கீட்டளவியை வடிவமைப்பதிலும் இலக்கப் படிமவாக்கத்திலும் பங்களிப்புகள் செய்துள்ளார். இவர் ஆந்திரமேடோ பால்வெளி கதிர்வீச்சு உமிழ்வும் பெர்சியூசு பால்வெளிக் கொத்துக் கதிர்வீச்சு உமிழ்வும் பற்றிய முதல் படங்களை எடுத்துள்ளார்; மேலும் பல முனைவான செயல்பாட்டில் உள்ள பால்வெளிகளின் இயல்புகளை அளந்துள்ளார். இவர்1985 இல் பொருள்வில்லை மறைக்கும் குறுக்கீட்டளவி நோக்கீடுகளை மேற்கொண்டுள்ளார். பிறகு, இவர் கேம்பிரிட்ஜ் ஒளியியல் பொருள்வில்லைத் தொகுப்புத் தொலைநோக்கியை உருவாக்கி, அதை இயக்கிட உதவியுள்ளார்.[3] அதேபோல இலக்கப் படிமவாக்க முறையையும் உருவாக்க உதவியுள்ளார். இவருக்கு 2001 இல் ஜாக்சன் குவில்ட்டுப் பதக்கம் தரப்பட்டது.[4] குறுக்கீட்டளவியல், பொருள்வில்லை வடிவமைப்புப் புலங்களில் தொழில்நுட்பப் பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது.[3]
இவர் கேம்பிரிட்ஜ், அரசிக் கல்லூரி ஆய்வுறுப்பினராக 1949 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு ஆக்கல்லூரியின் ஆய்வுறுப்பினராக1999 முதல் தேர்ந்தெடுக்கப்பட்டு, அத்தகைமையோடு தன் ஆயுள் முழுவதும் அதாவது, 2010 இல் தன் இறப்பு நேர்ந்தவரை தொடர்ந்திருந்துள்ளார்.