புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 12°06′N 93°01′E / 12.10°N 93.02°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 34.8 km2 (13.4 sq mi) |
நீளம் | 13.3 km (8.26 mi) |
அகலம் | 4.3 km (2.67 mi) |
கரையோரம் | 34.3 km (21.31 mi) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அஞ்சல் குறியீட்டு எண் | 744202[1] |
தொலைபேசி குறியீடு | 031927 [2] |
ISO code | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
ஜான் லாரன்ஸ் தீவு (John Lawrence Island) என்பது அந்தமான் தீவுகளின் ஒரு தீவு ஆகும். இது இந்திய ஒன்றியப்யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான தெற்கு அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்தது. [5] இந்த தீவு போர்ட் பிளேரிலிருந்து வடகிழக்கில் 54 km (34 mi) தொலைவில் அமைந்துள்ளது.
1864 முதல் 1869 வரை இந்தியாவின் வைஸ்ராயாக பணியாற்றிய சர் ஜான் லாரன்ஸ் பெயர் இந்த தீவுக்கு இடப்பட்டது.
ரிச்சிஸ் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த இந்த தீவானது பீல் தீவுக்கும், சர் ஜான் லாரன்ஸின் சகோதரத் தீவான: என்றி லாரன்சு தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது. ஜான் லாரன்ஸ் தீவு நீண்ட வடிவத்தில் உள்ளது. இது மூன்று பக்கங்களிலும் கடற்கரைகளைக் கொண்டுள்ளது. தீவு மிகவும் நீளமான வடிவத்தில் இருப்பதால், இதன் கடற்கரை நீண்ட தோலைவு வரை நீண்டுள்ளது. [6]
அரசியல் ரீதியாக, ஜான் லாரன்ஸ் தீவு போர்ட் பிளேர் தாலுகாவின் ஒரு பகுதியாகும். [7]
இத்தீவு மக்கள் வசிக்காதது.
ஜான் லாரன்ஸ் தீவை அடைய ஒரே வழியாக உள்ளூர் படகு சேவைகளே உள்ளன. இங்கு செல்ல போர்ட் பிளேர் மற்றும் ஹேவ்லாக் தீவிலிருந்து படகு சேவை உள்ளது. இதன் மூலம் இந்த தீவை அடையலாம். இருப்பினும், படகு பயணமானது வானிலை மற்றும் கடலின் சூழல் ஆகியவற்றுக்கு உட்பட்டவை. அடர்த்தியான சதுப்புநில காடுகளால் தொடர்ச்சியாக அமைந்துள்ள ஜான் லாரன்ஸ் தீவுக்கும் ஹென்றி லாரன்ஸ் தீவுக்கும் இடையில் ஒரு சிறிய நீர்சந்தி உள்ளது. ஜான் லாரன்ஸ் தீவின் நிலப்பரப்பில் முக்கிய தாவரங்களாக ஈர நிலக் காடுகள் மற்றும் சதுப்புநிலக் காடுகளைக் கொண்டுள்ளது.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link)