ஜாபுவா அருட்சகோதரிகள் வன்கலவி வழக்கு (Jhabua nuns rape case) செப்டம்பர் 23, 1998 அன்று இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவா மாவட்டத்தில் நான்கு அருட்சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்ததைக் குறிக்கிறது. [1] அருட்சகோதரிகள் வசிக்கும் ஆசிரமத்திற்குள் 18லிருந்து-26 ஆண்கள் நுழைந்து முழு ஆசிரமத்தையும் சூறையாடினர். மேலும், சில ஆண்கள் அருட்சகோதரிகளை பாலியல் பலாத்காரமும் செய்தனர். [2] [3]
அக்டோபர் 11, 1997 அன்று, பழங்குடியினர் அதிகமாக உள்ள ஜாபுவா மாவட்டத்தின் நவாபுரா கிராமத்திலுள்ள பிரீதிசரன் ஆசிரமத்தில் ஒரு மருத்துவமனையை அமைக்க தமிழ்நாட்டிலிருந்து சில அருட்சகோதரிகள் வந்தனர். அவர்களில் மூன்று பேர் 25லிருந்து-30 வயதுக்குட்பட்டவர்கள். மேலும், நான்காவது நபர் முப்பது வயதுக்கு மேற்பட்டவர். அவர்கள் விரைவில் கிராமத்தை தங்கள் வீடாக மாற்றிக் கொண்டனர். [4] இரண்டு காவலர்களால் பாதுகாக்கப்படும் ஆசிரமத்தில் நான்கு அருட்சகோதரிகள் தனியாக வசித்து வந்தனர். ஆசிரமத்தின் பொறுப்பாளர் ஒரு பூசகர் ஆவார். அவர் இவர்களின் வசிப்பிடத்துக்கு அருகில், 500 மீட்டர் தொலைவில் வாழ்ந்து வந்தார். அந்த பகுதியில் தெரு விளக்குகள் ஏதும் இல்லை. மேலும், மாலைக்குப் பிறகு அப்பகுதி முற்றிலும் இருட்டாகி விடும்.[5]
செப்டம்பர் 23 அன்று அதிகாலை 2 மணியளவில், ஆசிரமத்திற்கு வந்த ஒரு குழுவினர், அருகிலுள்ள கிராமத்தில் உள்ள சில குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி அருட்சகோதரிகளை தங்களுடன் வருமாறு கேட்டுக் கொண்டனர். அந்த நேரத்தில் பூசகர் ஆசிரமப் பணிக்காக தகோத் நகருக்குச் சென்றிருந்தார். காவலாளியும் தனது அறையில் தூங்கி கொண்டிருந்தார். காவலாளிக்கு அழைப்பு விடுக்குமாறு அருட்சகோதரிகள் சொன்னார்கள். ஆண்கள் பிரதான கதவுக்கு வெளியே இருந்த உலோகக் கதவை உடைக்க முயற்சித்து தாங்கள் உள்நுழையத் தொடங்கினர். அவர்களின் நோக்கத்தை உணர்ந்த அருட்சகோதரிகள், அரை கிலோமீட்டர் தூரத்தில் தூங்கிக் கொண்டிருந்த காவலரின் கவனத்தை ஈர்க்க விசில் ஒலி எழுப்பினர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஆசிரமத்தின் உள்ளே நுழைந்து இவர்களை ஒரு அறையில் அடைத்து அதை பூட்டினர். பின்னர், அந்த நபர்கள் மொத்த வளாகத்தையும் சூறையாடினர். தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் தோராயமாக 20,000 ரூபாய் பணம் திருடப்பட்டதாக கூறப்பட்டது.[5]
தாக்குதல் நடத்தியவர்கள் வெளியேறத் தொடங்கியபோது, சில ஆண்கள் மட்டும் அங்கேயே இருந்தனர். அவர்கள், பின்னர் ஆசிரமத்திற்கு வெளியே அருட்சகோதரிகளை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, நான்காவது அருட்சகோதரி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை, ஏனெனில் அவர் வயதானவர். மேலும் அவர், இச்செயலைத் தடுக்க முயன்றதற்காக தாக்கப்பட்டார்.[5] [6] அவர்கள் நான்கு பேரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.[7]
ஏப்ரல் 2001 இல், பதினேழு ஆண்கள் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர்.[8] [9]
ஏப்ரல் 2017 இல், 2006 ஆம் ஆண்டு சிறைவாச விடுமுறையிலிருந்து தப்பிய பிடியா சிங்காரியாவை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர்.[10] [11]
மார்ச் 2019 இல், தப்பியோடிய குற்றவாளி கலு லிம்ஜி 21 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் துறையால் கைது செய்யப்பட்டார். [12] சம்பவம் நடந்த உடனேயே 26 குற்றவாளிகளில் 24 பேர் கைது செய்யப்பட்டு 13 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், 9 பேருக்கு உள்ளூர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.[13]
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
{{cite web}}
: |first3=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)