ஜாய் ஜே. கைமபரம்பன் ( ஜெய் ஜெ கயிமபரம்பன் ) (Joy J. Kaimaparamban (Jōyi Je Kayimāparampan) பிறப்பு: அக்டோபர் 11, 1939) ஓர் இந்திய புதின எழுத்தாளர் ஆவார். இவர் பெரும்பான்மையாக மலையாளத்தில் எழுதுகிறார். இந்தியாவின் கேரளாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த கைமபரம்பன் ஆங்கில ஆசிரியராக கேரளாவின் பல பள்ளிகளில் பணியாற்றினார். [1] இளம் வயதிலேயே தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய இவர் தொடர்ந்து எழுதி வருகிறார். தற்போது இவர் குடும்பத்துடன் ஆலப்புழா (அலெப்பி) மாவட்டத்தில் உள்ள வயலாரில் வசித்து வருகிறார். இவர் தனது தாய்மொழியான மலையாளத்தில் பல புதினங்கள், சில நாடகங்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவை அனைத்தும் கோட்டயம், டி.சி புக்ஸ் மற்றும் எஸ்.பி.சி.எஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அகில இந்திய வானொலி இவரது பல சிறுகதைகள் மற்றும் நாடகங்களை ஒளிபரப்பியுள்ளது. 1977 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர் விருதை வென்றார் , அவரது முதல் புதினமான உரையூருணா பக்கலுகலுக்காகவும், 1990 ஆம் ஆண்டில் குங்குமம் பரிசை வென்றார். தி அஸூர் ஆஃப் சொலிசிட்யூட் என்பது ஆங்கிலத்தில் இவரது முதல் புதினமாகும்.