ஜார்ஜ் மேக்சுவெல் அழகய்யா (22 நவம்பர் 1955 – 24 சூலை 2023) ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த செய்தி வாசிப்பாளர், செய்தியாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குனர் ஆவார். பிபிசி நியூஸ் அட் சிக்ஸ் எனும் நிகழ்ச்சியின் வழங்குனராக 2007 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பிபிசி உலகச் செய்திகள் அலைவரிசையில் ஜிஎம்டி எனும் நிகழ்ச்சியின் முதன்மை வழங்குனராக 2010 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர்.
ஜார்ஜ் மேக்சுவெல் அழகய்யா இலங்கையின் கொழும்பு நகரில் 22 நவம்பர் 1955 ஆம் ஆண்டு பிறந்தார்.[1][2][3] இவரின் பெற்றோர் டொனால்டு அழகய்யா - தெரஸ் இணையர் இலங்கைத் தமிழர்கள் ஆவர்.[4] 1961 ஆம் ஆண்டில், இவரின் பெற்றோர் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள கானா நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். அங்குள்ள கிறிஸ்ட் தி கிங் பன்னாட்டுப் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார்.[5] இவருக்கு நான்கு சகோதரிகள் இருந்தனர்.[6] தனது உயர் பள்ளிக் கல்வியை இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் நகரத்திலுள்ள புனித ஜான் கல்லூரியில் கற்றார். அதன் பிறகு, டரம் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான வேன் மைல்டெர்ட் கல்லூரியில் அரசியல் அறிவியல் கற்றார்.[5] டரம் நகரத்தில் இருந்தபோது, பாலடினேட் எனும் மாணவர்களுக்கான செய்தித்தாளுக்காக எழுதினார். பின்னர், அந்த செய்தித்தாளின் ஆசிரியராகவும் பணியாற்றினார். டரம் மாணவர் சங்கத்தின் அலுவலராகவும் பணியாற்றினார்.[5]
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)