ஜார்ஜ் ஐர் ஆண்ட்ரூஸ் (George Eyre Andrews) என்பவர் ஒரு அமெரிக்க கணிதவியலாளர் ஆவார். 1938 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் நாள் பிறந்தார்.[1] சிறப்பு சார்புகள், எண் கோட்பாடு, கணித பகுப்பாய்வு மற்றும் சேர்மானவியல் ஆகியவற்றில் பணிபுரிந்தார்.
இவர் தற்போது இவான் பக் தலைவராக இருந்த பென்சி்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக பணிபுரிந்தார்.[2][3]. இவர் தனது இளங்கலைப் படிப்பை ஓரிகான் மாநில பல்கலைக்கழகத்தில் கற்றார்.[2] இவர் 1964 ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை பெற்றார், அங்கு இவரது ஆலோசகராக ஹான்ஸ் ராட்மேச்சர் இருந்தார்.[1][4] 2008-2009 காலகட்டத்தில் இவர் அமெரிக்கன் கணிதவியல் சங்கத்தின் தலைவராக இருந்தார்.[5]
ஆண்ட்ரூஸின் பங்களிப்புகளில் பல ஒரு பொருள் நூல்களாகும். 250 இற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மற்றும் q-தொடர்கள், சிறப்பு சார்புகள், சேர்வியல் மற்றும் பயன்பாடுகள் பற்றிய சிறப்பான கட்டுரைகளும் உள்ளன.[6][7]
இவர் எண் பிரிவினை கோட்பாட்டில் உலகின் முன்னணி நிபுணராகக் கருதப்படுகிறார்.[1][8][2] 1976 இல் இராமானுசரின் காணாமல் போன குறிப்பு ஏட்டினை கண்டுபிடித்தார். இவர் கணிதக் கற்பித்தலில் ஆர்வம் கொண்டவர்.[2]
இவரது புத்தகமான The Theory of Partitions என்பது எண் பிரிவினை பற்றிய நிலையான குறிப்பு ஆகும்.[1]
இவரது எண் பிரிவினை மற்றும் q-தொடர்களின் கோட்பாடுகளில் கணிதத்தில் திறன்மிகுந்தவர் ஆவார்.எண் கோட்பாடு மற்றும் சேர்வியல் போன்றவற்றில் இவரது பணி இயற்பியலில் பல முக்கியமான பயன்பாடுகளுக்கு வழிவகுத்தது.[9]
ஆண்ட்ரூஸ் 2003 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் கழகத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] இவர் 1997 ஆம் ஆண்டில் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டில் பெர்லினில் நடந்த கணிதவியலாளர்களின் சர்வதேச காங்கிரசால் அழைக்கப்பட்ட சிறப்பு பேச்சாளராக இருந்தார்.[10] 2012 ஆம் ஆண்டில் இவர் அமெரிக்கன் கணிதவியல் சங்கத்தின் உறுப்பினரானார்.[11][12]
1998 ஆம் ஆண்டில் பர்மா பல்கலைக்கழகம், 2002 ஆம் ஆண்டில் புளோரிடா பல்கலைக்கழகம், 2004 ஆம் ஆண்டில் வாட்டர்லூ பல்கலைக்கழகம், 2012 ஆம் ஆண்டில் இந்தியாவின் கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மற்றும் 2014 ஆம் ஆண்டில் அர்பானா-சாம்பேனில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கின.[6][13][9]
"Special functions" by George Andrews, Richard Askey, and Ranjan Roy, Encyclopedia of Mathematics and Its Applications, The University Press, Cambridge, 1999.[17]
↑ 1.01.11.21.3Berndt, Bruce C.; Rankin, Robert Alexander, eds. (1995), Ramanujan: Letters and Commentary, History of Mathematics, vol. 9, American Mathematical Society, p. 305, Bibcode:1995rlc..book.....B, ISBN9780821891254, Andrews is generally recognized as the world's leading authority on partitions and is the author of the foremost treatise on the subject.