ஜார்ஜ் ராபின்சு ராபின்சு | |
---|---|
Member of the U.S. House of Representatives from நியூ செர்சி's இரண்டாம் district | |
பதவியில் மார்ச் 4, 1855 – மார்ச் 3, 1859 | |
முன்னையவர் | சார்லசு ஸ்கெல்டன் |
பின்னவர் | ஜான் எல்.என். ஸ்ட்ரட்டன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அல்லேன்டவுன், நியூ செர்சி | செப்டம்பர் 24, 1808
இறப்பு | பெப்ரவரி 22, 1875 ஆமில்டன் சதுக்கம், நியூ செர்சி | (அகவை 66)
அரசியல் கட்சி | எதிர்கட்சி (முதற் பணிக்காலம்) குடியரசுக் கட்சி (இரண்டாம் பணிக்காலம்) |
தொழில் | அரசியல்வாதி |
ஜார்ஜ் ராபின்ஸ் ராபின்ஸ் (George Robbins Robbins, செப்டம்பர் 24, 1808 – பெப்ரவரி 22, 1875) 1855 முதல் 1859 வரை நியூ செர்சியின் இரண்டாம் மாவட்டத்திலிருந்து எதிர்கட்சி/குடியரசுக் கட்சி சார்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அரசியல்வாதி.
ராபின்சு செப்டம்பர் 24, 1808இல் நியூ செர்சியின் அல்லேன்டவினில் பிறந்தார். நல்ல இலக்கியக் கல்விக்குப் பின்னர் பிலடெல்பியாவின் ஜெபர்சன் மருத்துவக் கல்லூரியிலிருந்து 1837இல் பட்டம் பெற்றார். தமது மருத்துவ சேவையை பென்சில்வேனியாவின் பால்சிங்டனில் தொடங்கினார். அதே ஆண்டு நியூ செர்சியின் மெர்சர் கவுன்ட்டியில் உள்ள ஆமில்டன் நகரியத்தின் ஆமில்டன் சதுக்கத்திற்கு குடிபெயர்ந்தார்.
ராபின்சு 34ஆவது அமெரிக்கப் பேராயத்திற்கு எதிர்கட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மீண்டும் குடியரசுக் கட்சி சார்பில் 35ஆவது பேராயத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்ச் 4, 1855 முதல் மார்ச் 3, 1859 வரை கீழவை உறுப்பினராக இருந்த ராபின்சு 1858இல் 36ஆவது பேராயத்திற்கு மீண்டும் நியமிக்கப்படவில்லை.
அரசியலிலிருந்து விலகிய பிறகு தமது மருத்துவ சேவையைத் தொடர்ந்தார். பெப்ரவரி 22, 1875இல் ஆமில்டன் சதுக்கத்தில் மரணமடைந்தார்.