ஜார்ஜ் கிஃபென் (George Giffen 27 மார்ச் 1859 - 29 நவம்பர் 1927) தென் ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடிய முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். நடுத்தர வரிசையில் மட்டையாட்டம் செய்த ஒரு பன்முக வீரரான கிஃபென், 1894-95 ஆஷஸ் தொடரின் போது ஆஸ்திரேலியாவின் தலைவராக இருந்தார், மேலும் 10,000 ஓட்டங்கள் எடுத்து முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் 500 இழப்புகளை வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய வீரர் ஆவார் . அவர் பிப்ரவரி 26, 2008 அன்று ஆஸ்திரேலிய துடுப்பாட்ட ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் .
1859 ஆம் ஆண்டில் நோர்வூட்டின் அடிலெய்ட் பகுதியில் ரிச்சர்ட் கிஃபென், ஒரு தச்சர் மற்றும் அவரது மனைவி எலிசபெத் (நீ சல்லாண்ட்) ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[1] சிஉவயது முதலே இவர் துடுப்பாட்டம் விளையாடினார். அவருக்கு பயிற்சியளித்த சார்லஸ் மற்றும் ஜேம்ஸ் குடென் ஆகிய இரு சகோதரர்களின் கவனத்தையும் இவரது திறனால் ஈர்த்தார். அவர் தனது துடுப்பாட்ட வாழ்க்கையை நோர்வூட் துடுப்பாட்ட சக்கத்தில் இருந்து தொடங்கினார், பின்னர் வெஸ்ட் அடிலெய்ட் சங்கத்திற்காக விளையாடச் சென்றார்.[2]
1877 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அவர் தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக கிழக்கு மெல்போர்ன் அணிக்கு எதிராக 16 மற்றும் 14 ஓட்டங்கள் எடுத்தார். நவம்பர் 1877 இல் அவர் டாஸ்மேனியாவுக்கு எதிராக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போஒட்டியில் கிஃபென் 47 ஓட்டங்கள் எடுத்தார் 16 ஓட்டங்கள் கொடுத்து 4 இழப்புகளைக் கைப்பற்றினார். இருந்தபோதிலும் டாஸ்மேனியா துடுப்பாட்ட அணி பின்தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ( தொடர்ச்சியாக இரண்டு முறை மட்டையாடுதல்) மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் கிஃபென் மேலும் 2 இழப்புகளை கைப்பற்ற முடிந்தது.[3] நவம்பர் 1880 வரை தென் ஆஸ்திரேலியாவுக்கும் விக்டோரியாவுக்கும் இடையிலான முதல் போட்டி மெல்போர்னில் நடந்தது. கிஃபென் 3 மற்றும் 63 ஓட்டங்கள் எடுத்து முதல் ஆட்டப் பகுதியில் 47 ஓட்டங்களுக்கு இரண்டு இழப்புகளை வீழ்த்தினார்.[4] அந்த ஆண்டின் பிற்பகுதியில் அடிலெய்டில் நடந்த போட்டியில், கிஃபென் 5 ஓட்டங்கள் எடுத்தார் 59 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இழப்புகளைக் கைப்பற்றினார்.அதன் பின்னர் அவர் தென் ஆஸ்திரேலிய அணியின் நிரந்தர வீரரானார்.
22 வயதான போது கிஃபென், 1881-82ல் இங்கிலாந்துக்கு எதிராக மெல்போர்னில் தேர்வுத் துடுப்பாட்ட அறிமுகமானார். அஞ்சல் சேவையில் சேர்ந்ததால், விடுப்பு கேட்க கிஃபென் தயங்கினார்.[5] அந்தப் போட்டியில் கிஃபென் 30 ஓட்டங்கள் எடுத்தார் ஆனால் அந்தப் போட்டியில் இவர் இழப்புகளை எடுக்கவில்லை.[6] சிட்னியில் நடந்த இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. மூன்றாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஐந்து இழப்புகள். வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, கிஃபென் இரண்டு ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார், பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை.[7] தொடரின் இறுதி போட்டியில் , கிஃபென் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்ட இழப்பினைக் கைப்பற்றினார்- வில்லியம் ஸ்காட்டன் ஜாக் பிளாக்ஹாமினால் இழப்புட் தாக்குதலில் அவரை வீழ்த்தினார் இந்த தொடரில் இரண்டு தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றது.