லெப்டினன்ட் ஜெனரல் ஜார்ஜ் வாஷிங்டன் (ஆங்கிலம்: Lieutenant General George Washington) என்றால், 1860 ஆம் ஆண்டின் குதிரையேற்றச் சிலை ஆகும். இச்சிலையை வாஷிங்டன், டிசி யில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக வளாகத்தின் ஓர் ஓரத்தில் காணலாம். [1] இந்த சிலை கிளார்க் மில்ஸால் செதுக்கப்பட்டது.
1783 ஆம் ஆண்டில், அமெரிக்கப் புரட்சிப் போர் முடிவடைந்த பிறகு, கான்டினென்டல் காங்கிரஸ் வாஷிங்டனின் குதிரையேற்றச் சிலையை நிறுவ வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பீடம் போரின் முக்கிய நிகழ்வைக் குறிக்க வேண்டும் என்பதும் இதில் அடங்கும். சில காரணங்களால் இந்த முயற்சி வாஷிங்டனின் மரணத்திற்குப் பிறகும் கைவிடப்பட்டது. டிசம்பர் 1799 ஆம் ஆண்டு, அமெரிக்க அரசாங்கத்தால் ஒரு பளிங்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தீர்மானித்தது. இருப்பினும், இந்த முயற்சியும் தாமதமானது. மே, 1800 ஆம் ஆண்டு, மூன்றாவது முறையாக மேற்கொண்ட முயற்சியாக, ஒரு பெருமதிப்பிலான கல்லறை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. பேசிய பிறகு, 1801, இதற்காக $800,000 நிதி ஒதுக்கப்பட்டதன் மூலம் சிலை தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வந்தது. [2]
1799 ஆம் ஆண்டுக்கான பிரதிநிதிகள் சபை அல்லது செனட் மட்டும் மேற்கொண்ட ஓர் எளிய தீர்மானம் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது குறித்த விசாரணைத் தீர்மானம், பிரதிநிதிகள் சபை உறுப்பினரான (பின்னர் ஜனாதிபதி) ஜேம்ஸ் புகேனனால் பிப்ரவரி 13, 1832 ஆம் தேதி, அறிமுகப்படுத்தப்பட்டு முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. வாஷிங்டனின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கு பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்யபிரதிநிதிகள் சபை ஒரு குழுவை நியமித்தது. இது ஜார்ஜ் வாஷிங்டனைக் கௌரவிக்கும் வகையில் ஒரு சிலையை உருவாக்கும் எண்ணத்தை மீண்டும் உயிர்ப்பித்தது.
குதிரையேற்றச் சிலை இறுதியாக ஜனவரி 25, 1853 ஆம் தேதி ஓர் அமெரிக்க காங்கிரஸின் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது. சிற்பி கிளார்க் மில்ஸால் செதுக்கப்பட்டது. பிப்ரவரி 22, 1860 ஆம் தேதி அன்று ஜனாதிபதி புகேனனால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. [3] இதன் மதிப்பு $60,000 ஆகும். [4]
பிரின்ஸ்டன் மற்றும் ட்ரெண்டன் போரில், வாஷிங்டன், வெடிகுண்டு மற்றும் பீரங்கி குண்டுகளுடன், அமெரிக்க விடுதலைப் படைக்கு தலைமை ஏற்று ஆங்கிலேயர்களை நோக்கி முன்னேறிச் செல்லும் காட்சியினை இச்சிலை சித்தரிக்கிறது. அவர் அமைதியாகவும் தளராத உறுதியுடனும் போரை மதிப்பீடு செய்தவாறு கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். [5]
குதிரையின் அமர்ந்துள்ள மனிதன் நெப்போலியன் ஆல்ப்ஸ் மலையை கடப்பதன் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளான். இப்போரின் போது வாஷிங்டனின் பதவி "லெப்டினன்ட் ஜெனரல்" (ஆங்கிலம்: Lieutenant General) அல்ல, மாறாக "ஜெனரல் மற்றும் கமாண்டர்-இன்-சீஃப்" (ஆங்கிலம்: General and Commander-in-Chief) ஆகும். 1798 ஆம் ஆண்டில் நிகழ்ந்த போரின் போது, அவர் லெப்டினன்ட் ஜெனரல் பதவியுடன் முதற்பெரும் இராணுவ படைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாஷிங்டன் வட்டத்தை பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்த பிறகு, இந்த குதிரையேற்ற சிலை தற்காலிகமாக கே தெரு சுரங்கப்பாதை கட்டுமானத்திற்காக இங்கிருந்து மாற்றப்பட்டது. 1936 ஆம் ஆண்டில், வாஷிங்டனும் அவரது குதிரையும் அங்கிருந்து மீண்டும் வாஷிங்டன் வட்டத்தின் மையத்திற்கே திரும்பினர். [6]
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க புரட்சி சிலைகளின் ஒரு பகுதியாக, இந்த சிலை தேசிய வரலாற்று இடங்களின் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது.