ஜி. ஆர். இந்துகோபன் | |
---|---|
பிறப்பு | 19 ஏப்ரல் 1974 வாழத்துங்கல், கொல்லம் மாவட்டம், கேரளம், India |
தொழில் | எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் |
தேசியம் | ![]() |
குறிப்பிடத்தக்க விருதுகள் |
|
ஜி. ஆர் . இந்துகோபன் ('G. R. Indugopan) ஒரு இந்திய திரைக்கதை எழுத்தாளரும், இயக்குநரும், மலையாள இலக்கிய எழுத்தாளரும் ஆவார்.[1] மலையாளத்தின் பின்நவீனத்துவ எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்பட்டவர்.[2], 2007 ஆம் ஆண்டு வெளியான ஒத்தக்கையன் என்ற மலையாளத் திரைப்படத்தின் இயக்குநராவார். மேலும் புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், நினைவுக் குறிப்புகள் மற்றும் பயணக் குறிப்புகள் உள்ளிட்ட பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.[3] கேரளத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் இரவிபுரம், வாழத்துங்கல் எனும் ஊரில் 1950இல் பிறந்து, ஒரு திருடனாக வாழ்ந்து, தான் சந்தித்த பல்வேறு நிகழ்வுகளையும், தனது சாகச வாழ்வையும் மணியன்பிள்ளை கூறும் தன்வரலாற்று நூலை அவருடன் இணைந்து இவர் எழுதிய "தஸ்கரன்: மணியன்பிள்ளயுடெ ஆத்மகதா" என்ற புத்தகம் 2013ம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகத்தால், குளச்சல் மு. யூசுப் என்பவரின் மொழிபெயர்ப்பில் திருடன் மணியன்பிள்ளை என்ற பெயரில் தமிழில் வெளியிடப்பட்டது.[4][5]
இந்துகோபன், தென்னிந்தியாவின் கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள வாழத்துங்கல் எனும் ஊரில் 1974 ஏப்ரல் 19 அன்று பிறந்தார்.[6]
நானோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்துகோபன் எழுதிய ஐஸ்-196 0 சி என்ற புத்தகம் டிசி புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது மலையாளத்தின் தொழில்நுட்பப் பின்னணியில் எழுதப்பட்ட முதல் நூல் என்று கூறப்படுகிறது.[7][8] சீங்கண்ணி வேட்டக்காரனின் ஆத்மகதையும் முதல லயணியும்,[9][10] கொல்லம் சவறை பகுதியின் தாது மணல் எடுக்கும் பகுதிகளைச் சுற்றி நிகழும் மணல்ஜீவிகள்,[11] சிறுகதை தொகுப்பான இருட்டு பத்ராதிபர் போன்றவை இவரது மற்ற படைப்புகளில் அடங்கும்.[12][13] இவர், அபுதாபி சக்தி விருது (2017, கொல்லப்பட்டி தயா கதைக்காக),[14] குங்குமம் விருது மற்றும் ஆஷான் பரிசு போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[15][7]
லால்ஜி இயக்கத்தில் சிறீனிவாசன் நடித்த மலையாளத் திரைப்படமான சித்தரியவர் படத்தின் திரைக்கதையை இந்துகோபன் எழுதியுள்ளார்.[16][17] 2007 ஆம் ஆண்டு வெளியான ஒத்தக்கையன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவரது புத்தகமான காளி கந்தகி, பி.எஃப். மேத்யூஸ் என்பவரால் திரைக்கதை எழுதப்பட்டு மதுபால் என்பவர் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தது.
மலையாள மனோரமா நாளிதழின் மூத்த துணை ஆசிரியராக ப்ணி புரியும் இந்துகோபன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.[6]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)