நிறுவுகை | 1978 |
---|---|
நிறுவனர்(கள்) | கிராந்தி மல்லிகார்ஜுனா ராவ் |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
முதன்மை நபர்கள் | ஜி. எம். ராவ் |
தொழில்துறை | கூட்டு நிறுவனம் |
சேவைகள் | விமான நிலையங்கள், எரிசக்தி, நெடுஞ்சாலைகள், நகர உள்கட்டமைப்பு மேம்பாடு |
இணையத்தளம் | https://www.gmrgroup.in/ |
ஜி.எம்.ஆர் குழுமம் (GMR Group) என்பது புது தில்லியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு உள்கட்டமைப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 1978 ஆம் ஆண்டில் கிராந்தி மல்லிகார்ஜுனா ராவ் என்பவரால் நிறுவப்பட்டது. பொது தனியார் கூட்டாண்மை மாதிரியைப் பயன்படுத்தி, குழுமம் இந்தியாவில் பல உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. நேபாளம், இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பீன்சு, கிரீஸ் உள்ளிட்ட பல நாடுகளில் உள்கட்டமைப்பு இயக்க சொத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் இந்த குழுமம் உலகளாவிய இருப்பைக் கொண்டுள்ளது. [1]
இக்குழுமத்தின் தலைவர் கிராந்தி மல்லிகார்ஜுனா ராவ், ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ராஜம் என்ற பகுதியைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஆவார். இவர், 340 மில்லியன் டாலர் உறுதியளித்தார், இது உள்கட்டமைப்பு நிறுவனத்தில் இவரது தனிப்பட்ட பங்கிற்கு சமமானதாகும். இது சமூகத்தின் கீழ் சேவை செய்யும் பிரிவினரிடையே கல்வியை மேம்படுத்த உதவுகிறது. [2]
இந்நிறுவனம் விவசாயம் சார்ந்த தொழில்களான சணல், சர்க்கரை, மதுபானம் போன்றவற்றில் தொடங்கி கடந்த தசாப்தத்தில் உள்கட்டமைப்பு இடத்தில் மெதுவாக நகர்ந்தது. இப்போது குழுமத்தின் ஆர்வங்கள் விமான நிலையங்கள், எரிசக்தி, நெடுஞ்சாலைகள், நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகியவற்றில் உள்ளன.
ஜி.எம்.ஆர் உள்கட்டமைப்பு நிறுவனம் என்பது துறைகளில் உள்ள பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களின் மூலதன தேவைகளுக்கு நிதியளிப்பதற்காக உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு நிறுவனமாகும். இது உள்கட்டமைப்பு திட்டங்களை அதன் பல்வேறு துணை நிறுவனங்கள் மூலம் மேம்படுத்துகிறது.
நிறுவனங்களின் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக சமூக சேவையிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். [3]
குழுமம் இந்தியாவின் மின் துறையில் 4400 மெகாவாட்டிற்கும் அதிகமான நிறுவப்பட்ட திறன் கொண்ட முன்னணி நிறுவனத்தில் ஒன்றாகும். இருப்பினும் சத்தீஸ்கர், ஜி.எம்.ஆர் மின் உற்பத்தி நிறுவனம், ஜி.எம்.ஆர் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் பங்குகளை 4 சூலை 2019 இல் அதானி நிறுவனத்தால் வாங்கப்பட்டது [4]
இந்தக் குழு இன்று 2135 மெகாவாட் மின் உற்பத்திச் செயல்பாட்டில் உள்ளது. மேலும், நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் நீர் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட எரிபொருள் கலவையுடன் பல்வேறு கட்டங்களில் 5043 மெகாவாட் உற்பத்தி செயல்பாட்டில் உள்ளது. அண்மையில் குசராத்தில் 25 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையமும், குசராத்தில் 2.1 மெகாவாட் மின் உற்பத்தியும், தமிழ்நாட்டில் 1.2 மெகாவாட் இரண்டு காற்றாலை மின் உற்பத்தியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கோல்டன் எனர்ஜி சுரங்கங்களில் சுமார் 806 மில்லியன் டன் நிலக்கரி இருப்புக்களும், இந்தோனேசியாவின் பி.டி.பராசெண்டோசா லெஸ்டாரியில் 104 மில்லியன் டன்களும் இந்தக் குழுவில் உள்ளன.
ஜி.எம்.ஆர் குழுமம் 2003 இல் விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்குள் நுழைந்தது.
ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், துருக்கியில் சபிஹா கோகீன் சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதில் நிறுவனம் ஈடுபட்டது. [5] புதுடில்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கும் நவீனமயமாக்குவதற்கும் குழுமம் ஈடுபட்டுள்ளது. போகாபுரத்தில்விசாகப்பட்டினத்திற்கான உத்தேச சர்வதேச விமான நிலையத்திற்கான வளர்ச்சி, செயல்பாடுகள் மற்றும் மேலாண்மைக்கான முயற்சியை இக்குழு பெற்றுள்ளது. [6] நாக்பூரில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு விமான நிலையத்தைரி விவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளது. [7]
தற்போது இக்குழுவால் கட்டப்பட்டுவரும் விமான நிலையங்கள்:
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், புது தில்லி
ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், ஐதராபாத்
கெராக்லியன் கிரீட், புதிய சர்வதேச விமான நிலையம், கிரீஸ்.
மோபா விமான நிலையம், கோவா.
மாக்டன் செபு சர்வதேச விமான நிலையம், செபு , பிலிப்பீன்ஸ்.
சூலை 2020 இல், ஏடிபி குழுமம் ஜிஎம்ஆர் விமான நிலையங்களின் 49% பங்குகளை வாங்குகியது. [8]
இந்தக் குழுமம் இந்தியாவில் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை உருவாக்குகிறது. குழுமம் நெடுஞ்சாலைத் துறையில் நான்கு பணிகளைக் கொண்டுள்ளது :
ஜி.எம்.ஆர் வரலட்சுமி அறக்கட்டளை, [9] என்பது ஜி.எம்.ஆர் குழுமத்தின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு பிரிவு ஆகும். கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரங்களில் முன்முயற்சிகள் மூலம் சமூகங்களின் மனித வளர்ச்சியில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்துவதே அறக்கட்டளையின் பார்வையாகக் கொண்டுள்ளது.