ஜி. ஏ. சந்திரசிறி G. A. Chandrasiri | |
---|---|
பிறப்பு | 1954 |
சேவை/ | இலங்கைத் தரைப்படை |
சேவைக்காலம் | 1974-2009 |
தரம் | படைத்துறைப் பணித்தலைவர் Major General |
படைப்பிரிவு | இலங்கை கவச வாகன அணி |
கட்டளை | தளபதி, பாதுகாப்புப் படைகளின் தலைமை அலுவலகம், யாழ்ப்பாணம், 52வது பிரிவு |
போர்கள்/யுத்தங்கள் | 1987-89 ஜேவிபி புரட்சி, ஈழப் போர் |
விருதுகள் | ரண விக்கிரம பதக்கம், உத்தம சேவைப் பதக்கம் |
வேறு செயற்பாடுகள் | வட மாகாண ஆளுனர் |
ஜி. ஏ. சந்திரசிறி (Major General G. A. Chandrasiri, பிறப்பு: 1954) இலங்கையின் படைத்துறைத் தளபதியும் யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையக முன்னாள் பொறுப்பதிகாரியும், இலங்கை இராணுவத்தின் 52வது படைப்பிரிவின் முன்னாள் தலைவரும், ஆவார். இவர் தற்போது வட மாகாண ஆளுனராகப் பணியாற்றுகிறார்.[1]
சந்திரசிறி 1974 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தில் இணைந்தார். 1976 இல் இவர் இலங்கை கவச வாகன அணியில் இரண்டாம் லெப்டினண்டாகச் சேர்ந்தார். பிரிகேடியராகத் தரம் உயர்த்தப்பட்டார். மன்னாரில் பணியாற்றிய பின்னர் ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் (2008-2009) யாழ்ப்பாணத் தலைமையகப் பொறுப்பதிகாரியாக இருந்தார். 2009 இல் இராணுவத்தில் இருந்து இளைப்பாறிய பின்னர் வட மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார்.