ஜி. கே. வெங்கடேசு | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 21 செப்டம்பர் 1927 |
பிறப்பிடம் | ஐதராபாத்து (இந்தியா), பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இறப்பு | 13 நவம்பர் 1993 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 66)
தொழில்(கள்) | நடிகர், இசை அமைப்பாளர், திரைகதை, பின்னணிப் பாடகர் |
இசைக்கருவி(கள்) | வீணை |
இசைத்துறையில் | 1946 இலிருந்து 1993 |
குருசாலா கிருஷ்ணதாஸ் வெங்கடேஷ் (ஜி.கே.வி) (G. K. Venkatesh, 21 செப்டம்பர் 1927 – 13 நவம்பர் 1993) என்பவர் கன்னட திரையுலகில் இசை அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் 1960 களில், 1970 களில் மற்றும் 1980 களில் புகழ்பெற்ற இசைகளை அமைத்துள்ளார். தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றினார்.
இவரிடம் இளையராஜா உதவியாளராக பணியாற்றினார். 200 திரைப்படங்களுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இருவரும் இணைந்திருந்த போது ஜிகேவி இசையமைத்துள்ளார்.[1]