நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Virgo |
வல எழுச்சிக் கோணம் | 12h 18m 59.3999s[2] |
நடுவரை விலக்கம் | +11° 07′ 33.7702″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 13.898[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M5[4] |
U−B color index | +1.065[5] |
B−V color index | +1.88[5] |
மாறுபடும் விண்மீன் | Flare star |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 5.82[3] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −1269.771±0.056[6] மிஆசெ/ஆண்டு Dec.: 203.444±0.033[6] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 154.6999 ± 0.0445[6] மிஆசெ |
தூரம் | 21.083 ± 0.006 ஒஆ (6.464 ± 0.002 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 14.72[7] |
விவரங்கள் | |
திணிவு | 0.12[7] M☉ |
ஆரம் | 0.16[8] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 5.0[9] |
வெப்பநிலை | 3110[9] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 17[8] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
ஜிஎல் கன்னிமீன், ஜி 12-30 என்றும் அழைக்கப்படுகிறது, இது கன்னி ஓரையில் உள்ள ஒரு விண்மீனாகும் . இது சூரிய குடும்பத்தில் இருந்து 10 புடைநொடிகளுக்குள் அமைந்துள்ள 70% க்கும் அதிகமான விண்மீன்களைப் போன்ற ஒரு மங்கலான செங்குறுமீனாகும்; அதன் தோற்றப் பொலிவுப் பருமை 13.898 ஆகும். இதை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது.
21.1 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஜிஎல் கன்னிமீன் M4.5V வகை முதன்மை விண்மீனாகும். மேலும், இது தோராயமாக 3110 கெ விளைவுறு வெப்பநிலையைக் கொண்டுள்ளது. இதன் ஒளிர்வு ( மின்காந்தக் கதிர்நிரலின் புலப்படும் பிரிவில் உமிழப்படுகிறது) சூரியனுடன் ஒப்பிடும்போது பத்தாயிரத்தில் ஒரு பங்கு மட்டுமே. இருப்பினும், அதன் கதிர்வீச்சின் குறிப்பிடத்தக்க பகுதி கண்ணுக்கு தெரியாத அகச்சிவப்பு ஒளியாக உமிழப்படுவதால், அதன் போலோமெட்ரிக் ஒளிர்வு சூரியனை விட 0.5% ஆக அதிகரிக்கிறது. இதன் பொருண்மை சூரியனைப் போல 12% ஆகும். இதன் ஆரம் சூரியனைப் போல 16% ஆகும். இது மிகவும் விரைவான சுழலி ஆகும்: அதன் சுழற்சி வேகம் குறைந்தது நொடிக்கு17 கிமீ ஆகும். இது தன் அச்சில் ஒரு சுழற்சியை முடிக்க அரை நாளுக்கும் குறைவான வட்டணை அலைவுநேரத்தை எடுத்துக்கொள்கிறது. விண்மீன் அடிக்கடி சுடருமிழ்வுகளை வெளியிடுகிறது. 2010 ஆம் ஆண்டில் குறைந்தது ஐந்துலுமிழ்வுகள் கண்டறியப்பட்டன.
ஜிஎல் கன்னிமீனுக்கு மிக நெருக்கமான விண்மீன் அமைப்பு கிலீசே 486, 6.4 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. [10]
{{citation}}
: CS1 maint: unflagged free DOI (link)