ஜிகார்சினசு Gecarcinus | |
---|---|
ஜிகார்சினசு குவாட்ரடசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிரசுடேசியானா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | பிராக்கியூரா
|
குடும்பம்: | |
பேரினம்: | ஜிகார்சினசு லீச், 1814
|
மாதிரி இனம் | |
ஜிகார்சினசு ரூரிகோலா (=கேன்சர் ரூரிகோலா) லின்னேயசு, 1758 |
ஜிகார்சினசு (Gecarcinus) என்பது நில நண்டு குடும்பமான ஜிகார்சினிடேயின் ஒரு பேரினமாகும். இந்த நண்டுகள் கரீபியக் கடலிலுள்ள தீவுகள் உட்பட அமெரிக்காவின் வெப்பமான கடலோரப் பகுதிகளில் காணப்படுகின்றன. கடல் தீவுகளிலிருந்து நான்கு சிற்றினங்கள் முன்னர் ஜிகேர்சினது துணைப்பேரினமாக, ஜான்கார்தியா, சேர்க்கப்பட்டது. ஆனால் இப்போது ஜான்கார்தியா தனிப் பேரினமாகக் கருதப்படுகிறது.[1] இந்த பேரினத்தின் அனைத்து உறுப்பினர்களும் பெரும்பாலும் தரைவாழ் விலங்குகளாகும். இருப்பினும் இவை இனப்பெருக்கம் செய்யக் கடலுக்குத் திரும்புகின்றன (இளம் உயிரிகள் கடலுக்குள் விடப்படுகின்றன). இவை பெரும்பாலும் வண்ணமயமானவை. சிவப்பு, ஆரஞ்சு, ஊதா, மஞ்சள், வெள்ளை அல்லது கறுப்பு நிறத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன. இதன் விளைவாக சில இனங்கள், குறிப்பாக ஜி. குவாட்ரடசு மற்றும் ஜி. லேட்டரலிசு மீன் காட்சி வர்த்தகத்தில் பிரபலமடைந்துள்ளன.
படம் | பெயர் | பொது பெயர் | பரவல் |
---|---|---|---|
ஜிகார்சினசு லேட்டிராலிசு (ஃப்ரிமின்விலே, 1835) | பிளாக்பேக் நில நண்டு, பெர்முடா நில நண்டு, சிவப்பு நில நண்டு | தென் பாட்ரே தீவு, டெக்சாஸ் தெற்கே வெனிசுவேலாவின் மாகுடோ | |
ஜிகார்சினசு குவாட்ரடசு (சாஸூர், 1853) | சிவப்பு நில நண்டு, வைட்ஸ்பாட் நண்டு, ஹாலோவீன் நண்டு, நிலவு நண்டு, ஹாலோவீன் நிலவு நண்டு, வாய் இல்லாத நண்டு அல்லது ஹார்லெக்வின் நில நண்டு | மெக்ஸிகோ தெற்கிலிருந்து பனாமா வரை பசிபிக் கடற்கரை | |
ஜிகார்சினசு ரூரிகோலா (லின்னேயசு, 1758) | ஊதா நில நண்டு, கருப்பு நில நண்டு, சிவப்பு நில நண்டு மற்றும் ஜாம்பி நண்டு | கியூபா மற்றும் மேற்கில் பஹாமாஸ் அண்டில்லஸ் வழியாக பார்படோஸ் வரை | |
ஜிகார்சினசு நோபிலி பெர்கர் & சுவர் 2014 | தென் அமெரிக்க பசிபிக் கடற்கரை, கொலம்பியா முதல் பெரு வரை |