ஜிங்கர் சங்கர்

ஜிங்கர் சங்கர்
ஒரு மேடை நிகழ்ச்சியில் ஜிங்கர்
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்லாஸ் ஏஞ்சலஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இசை வடிவங்கள்பாப், ராக், உலக இசை, கருநாடக இசை
தொழில்கள்பாடகர்-பாடலாசிரியர், வயலின் கலைஞர், இசை நடத்துனர்
இசைக்கருவி(கள்)பாடுதல், இரட்டை வயலின், வயலின், வியோலம்
இசைத்துறையில்2003— தற்போது வரைt
இணையதளம்ginggershankar.com

ஜிங்கர் சங்கர் (Gingger Shankar) ஓர் அமெரிக்கப் பாடரும், இசையமைப்பாளரும், பல இசைக்கருவிகளை இயக்கும் கலைஞரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு வெளிவந்த பிரெஞ்சு-ஈரானிய-அமெரிக்க நாடகத் திரைப்படமான சர்க்கம்ஸ்டன்ஸ் உட்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இளமை வாழ்க்கை

[தொகு]

கலிபோர்னியாவின் இலாஸ் ஏஞ்சலஸில் பிறந்த ஜிங்கர், இந்தியாவில் வளர்ந்தார். இவர் வயலின் கலைஞர் எல். சுப்பிரமணியத்தின் மூத்த மகள் ஆவார். இவரது தாயார் விஜி சுப்பிரமணியம், இவரது பாட்டி லட்சுமி சங்கரைப் போலவே ஒரு பாரம்பரிய பாடகர் ஆவார். புகழ்பெற்ற சித்தார் கலைஞர் ரவி சங்கரின் மைத்துனியாவார்.[1][2] குழந்தையாக இருந்தபோது, பாடவும், நடனமாடவும், வயலின், பியானோ வாசிக்கவும் கற்றுக் கொண்டார். மேலும் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள கலாசேத்திரா படைப்புக் கலைப் பள்ளியில் பயின்றார். பின்னர், கலிபோர்னியாவின் ஷெர்மன் ஓக்ஸில் தொழில்முறை ஓபரா பாடகர் டான்டோ கார்டினலுடன் ஓபரா குரலிசையைப் படித்தார். மேலும், மேடை தயாரிப்புகளிலும் விளம்பரங்களிலும் நடித்தார். இவர் தனது 14 வயதில் தொழில் ரீதியாக நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கினார்.

ஜிங்கர் சங்கர் வயலின், செலோ, பியானோ வாசிக்கிறார். இரட்டை வயலின் வாசித்த உலகின் ஒரே பெண் இவர் மட்டுமே. [3] [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Das, Mohua (12 Jul 2014). "Being a Shankar". Telegraph. Archived from the original on 1 October 2023.
  2. "Gingger Shankar: Bio". Retrieved July 17, 2012.
  3. "Gingger Shankar: Bio". Retrieved July 17, 2012."Gingger Shankar: Bio". Retrieved July 17, 2012.
  4. "Gingger Shankar: I am a Hybrid". Archived from the original on April 11, 2011. Retrieved April 9, 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]