ஜிஜா மாதவன் அரிசிங் | |
---|---|
முனைவர் ஜிஜா மாதவன் அரிசிங் | |
அதிகாரி, இந்தியக் காவல் பணி | |
பதவியில் 1975–2011 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜிஜா மாதவன் 8 சனவரி 1951 திருவனந்தபுரம், கேரளா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பெற்றோர் | டி. கே. மாதாவன் & பொன்னம்மா |
வாழிடம் | பெங்களூரு |
கல்வி | இளங்கலை ஆங்கில இலக்கியம் முதுநிலை ஆங்கில இலக்கியம் முதுகலை சமூகவியல் முனைவர் |
முன்னாள் கல்லூரி | கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் மைசூர் பல்கலைக்கழகம் |
வேலை | கலைஞர், சமூக செயற்பாட்டாளர், காவல்துறை தலைமை இயக்குநர் (ஓய்வு) |
இணையத்தளம் | jijaharisingh |
ஜிஜா அரி சிங் (Jija Madhavan Harisingh)(பிறப்பு 8 சனவரி 1951)[1] கர்நாடகாவின் முதல் இந்தியக் காவல்துறை பணிப் பெண் அதிகாரி ஆவார்.[2] இவர் 2011-ல் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை 36 ஆண்டுகள் காவல் துறையின் தலைமை இயக்குநராக பணியிலிருந்தார்.
ஜிஜாவுக்கு பல பிரபலமான பட்டப்பெயர்களும் உண்டு. ஜே மேக் பெண்களுக்கான சிறப்பு அட்டைப்படத்தில் இவரது அழகான படம் இடம்பெற்றுள்ளது. ஜிஜா மா. அரிசிங்கை தென்னிந்தியாவின் முதல் பெண் இ. கா. ப. அதிகாரி[தொடர்பிழந்த இணைப்பு] என்று விவரிக்கிறது.
ஜிஜா அரி சிங் குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று, 1975ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணியினைத் தேர்வு செய்தார். அப்போது காவல்துறையில் சேருவது பெண்ணுக்கு விருப்பமில்லாத பணியாக இருந்தது. அச்சமயம் கிரண் பேடி பயிற்சியிலிருந்தார். ஆனால் வேறு யாரும் பணியில் இல்லை.[3]
ஜிஜா அரி சிங் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் குருமாடப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். சீறீகார்யம் மற்றும் பாலக்காட்டில் உள்ள அரசுப் பள்ளி உட்படப் பல பள்ளிகளிலும் படித்தார். பல்கலைக்கழக கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் போதே, படைப்பாற்றலைப் பொழுதுபோக்கை வளர்த்துக்கொண்டார். மேலும் இதழியலில் முதுகலை பட்டயமும் பெற்றார். 1975-ல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்த பிறகும், இவர் தனது கற்றல் மற்றும் கல்வியைத் தொடர்ந்தார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல சேவைப் பயிற்சித் திட்டங்களைச் செய்தார். மைசூர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் மற்றொரு முதுகலைப் பட்டமும் பெற்றார். இவர் தனது சிறப்பு ஆர்வம், பெண்கள் அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். கர்நாடக மாநிலத்தில் காவல்துறையில் பணியமர்த்தப்பட்ட பெண்களைப் பற்றிய சமூக-பொருளாதார ஆய்வை மேற்கொண்டார்.[4]
ஜிஜா மாதவனின் ஆய்வுத் தலைப்பானது கர்நாடக காவல்துறையில் பாலின நிலை என்பதாகும். இதற்கு மைசூர் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது. பெண் காவலர்களின் கீழ்நிலையிலிருந்து மேல் நிலையில் பணியில் வரை உள்ளவர்கள் குறித்து தனது ஆய்வினை இவர் மேற்கொண்டார்.இந்த ஆய்வறிக்கை சூத்கங்காவில் வெளியிடப்பட்டுள்ளது.
கலைக்கான பங்களிப்பிற்கான இந்திரா பிரியதர்ஷினி தேசிய விருதைப் பெற்றவர், ஜிஜா அரிசிங். வாசிங்டன், வொல்லோங்காங் மற்றும் புது தில்லியில் உள்ளிட்ட பல பகுதிகளில் கண்காட்சிகளை நடத்திய புகழ்பெற்ற கலைஞர் ஆவார்.[5] இவரது படைப்புகள் இலண்டன், வியன்னா, பெர்லின், ஜகார்த்தா போன்ற இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அமிர்தா ஷெர்கில் ரீவிசிட்டட் திட்டத்தின் பன்னாட்டுக் கண்காட்சிகளுக்காக இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான குழு தேர்ந்தெடுத்த ஐம்பது இந்தியப் பெண் கலைஞர்களில் ஜிஜா மாதவன் அரிசிங்கும் ஒருவர்.[6]
ஜிஜா தற்போது பெங்களூர், இயக்குநர்கள் நிறுவனத்தில், தலைவராகவும், இந்தியக் கலையை ஊக்குவிக்கும் இலாப நோக்கற்ற அறக்கட்டளையான தி ஆர்ட் மந்திரம் அறக்கட்டளையின் கெளரவத் தலைவராகவும் உள்ளார்.[7]