நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Vela |
வல எழுச்சிக் கோணம் | 10h 14m 51.77869s[1] |
நடுவரை விலக்கம் | −47° 09′ 24.1928″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 13.46[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M4[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 34.66±0.48[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −1,054.201 மிஆசெ/ஆண்டு Dec.: +414.512 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 79.3206 ± 0.0182[1] மிஆசெ |
தூரம் | 41.119 ± 0.009 ஒஆ (12.607 ± 0.003 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 0.194±0.005[3] M☉ |
ஆரம் | 0.215±0.009[3] R☉ |
ஒளிர்வு | 0.00436±0.00013[3] L☉ |
வெப்பநிலை | 3,196±71[3] கெ |
சுழற்சி | 122.3+6.0 −5.0 d[4] |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
ஜிஜே 1132 (GJ 1132) என்பது வேலா விண்மீன் தொகுப்பில் பூமியிலிருந்து 41.1 ஒளியாண்டுகள் (12.6 புடைநொடிகள்) தொலைவில் உள்ள ஒரு சிறிய செங்குறுமீனாகும்.[1] 2015 ஆம் ஆண்டில், ஒரு சூடான பாறைவகை புவி அளவிலான கோள் ஒவ்வொரு 1.6 நாட்களுக்குமளொருமுறை விண்மீனைச் சுற்றி வருவது தெரியவந்தது. 2018 இல், இரண்டாவது கோளும் மூன்றாவது கோளும் இருத்தல் சாத்தியமானதென உணரப்பட்டது.[4]
2018 ஜூன் 12, ,நிலவரப்படி, இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட புறக்கோள்களும் மேலும் ஒரு புறக்கோளும் ஜிஜே 1132 விண்மீனைச் சுற்றி வருகின்றன.
ஜிஜே 1132 பி என்பது GJ 1132 விண்மீன்மண்டலத்தின் உள் கோளாகும். அதே போல் இது மிகச்சிறியது. இது 1.13 R ஆரமும் 1.66 புவியளவுப் பொருண்மையும் கொண்டு புவியை ஒத்திருக்கிறது. இது புவியை விட சற்று அடர்த்தியானதும் 30% அதிக மேற்பரப்பு ஈர்ப்பு விசையும் கொண்டதாகும், அதாவது பாறையை உட்கூறாகக் கொண்ட தாகும். புவியுடன் இதன் ஒற்றுமைகள் இருந்தபோதிலும், அதன் 1.6 நாள் வட்டணை அலைவுநேரத்தினால் 19 மடங்கு அதிக சூரிய ஒளியைப் பெறுவதால், அது வாழத் தகுதியற்றதாக மிகவும் வெப்பமாக கருதப்படுகிறது. லாம் ஆண்டில், கோளுக்கு வளிமண்டலம் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, சில ஆய்வுகள் வளிமண்டலத்திற்கான சான்றுகளைக் கண்டறிந்தன. [6][7]ஆனால் மற்றவை வளிமண்டலத்தின் இருப்பு அல்லது இல்லாமையை முடிவில்லாத ஒரு தட்டையான, சிறப்பற்ற கதிர்நிரலைக் கண்டறிந்தன.[8][9][10]
2018, ஜூனில் சிலியில் உள்ள இலா சில்லா ஆய்வகத்தில் ஈசா (ESO) 3.6 மீ தொலைநோக்கியில் உள்ள கார்ப்சு கதிர்நிரல்பதிவி வழி ஜிஜே 1132 சி ஆனது பொன்பில்சு குழுவினரால் அறிவிக்கப்பட்டது. கோளின் கடப்பு எதுவும் கண்டறியப்படவில்லை, ஆனால் இது புவியின் குறைந்த அளவு பொருண்மை சுமார் 2.6 M அளவு கொண்டுள்ளது. மேலும் 300 கெ சமனிலை வெப்பநிலையுடன் புவியையை விட 1.9 மடங்கு சூரிய ஒளியைப் பெறுகிறது. இது ஜிஜே 1132 விண்மீனின் வாழக்கூடிய மண்டலத்தின் உள் எல்லைக்கு வெளியே சுற்றுகிறது (இது புவியின் விண்மீன் பாயத்தை விட 1.6 மடங்கு அதிகமாகும்), ஆனால் கோல் வளிமண்டலத்தின் சரியான பண்புகள் தெரியாததால், அது இன்னும் வாழக்கூடியதாக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், கடப்பு ஏதும் இல்லாததால், அதன் வளிமண்டல பண்புகளைத் தீர்மானிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
உறுதிப்படுத்தப்படாத குளிர் மீப்புவியும் இந்த விண் அமைப்பில் கண்டறியப்பட்டது, குறைந்தபட்ச பொருண்மை சுமார் 8.4 M. குறைந்த சமனிலை வெப்பநிலை 111கெ ஆகும் இது உறுதிப்படுத்தப்பட்ட கோலாகக் கருதப்படாததால் அடைப்புக்குறியுடன் ஜிஜே 1132 (டி) என பெயரிடப்பட்டுள்ளது. GJ 1132 b மற்றும் c உடன் ஒப்பிடக்கூடிய 0.01% க்கும் குறைவான தவறான எச்சரிக்கை நிகழ்தகவு கொண்ட குறிகை இருந்தபோதிலும், அது விண்மீனின் காந்தச் சுழற்சியின் காலத்திற்கு அருகில் உள்ளது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் | ||
---|---|---|---|---|---|---|
b | 1.66 ± 0.23 M⊕ | 0.0153 ± 0.0005 | 1.6289304(13)[12] | <0.22 | ||
c | >2.64 ± 0.44 M⊕ | 0.0476 ± 0.0017 | 8.929 ± 0.010 | <0.27 | ||
d (உறுதிப்படுத்தப்படவில்லை) | >8.4 +1.7 −2.5 M⊕ |
0.35 ± 0.01 | 176.9 ± 5.1 | <0.53 | — | — |