இயல்புகள் | |
---|---|
விண்மீன் வகை | M3.5V |
தோற்றப் பருமன் (B) | 13.46 |
தோற்றப் பருமன் (R) | 11.511 |
தோற்றப் பருமன் (J) | 7.380 |
தோற்றப் பருமன் (H) | 6.76 |
தோற்றப் பருமன் (K) | 6.485 |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −9.7±0.2 கிமீ/செ |
Proper motion (μ) | RA: 332.59±1.01[1] மிஆசெ/ஆண்டு Dec.: −271.83±1.11 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 131.5996 ± 0.4285[2] மிஆசெ |
தூரம் | 24.78 ± 0.08 ஒஆ (7.60 ± 0.02 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 14.316 |
சுற்றுப்பாதை[3] | |
Primary | GJ 3991 B |
Companion | GJ 3991 A |
Period (P) | 14.7136±0.0005 days (0.0402836±0.0000014 yr) |
Semi-major axis (a) | 0.015+0.01 −0.05" (0.1102 AU) |
Eccentricity (e) | 0.068±0.004 |
Argument of periastron (ω) (primary) | 175.0±3.0° |
வீச்சு (இயற்பியல்) (K1) (primary) | 50.6±0.2 km/s |
விவரங்கள் | |
GJ 3991 A | |
திணிவு | 0.20 M☉ |
வெப்பநிலை | 3250±50 கெ |
Metallicity | 1.584+0.235 −0.205 Fe/☉ |
GJ 3991 B | |
திணிவு | 0.50 M☉ |
வெப்பநிலை | ~4900 K |
அகவை | >6? பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
G 203-47, Gliese 3991, HIP 83945, USNO 752 | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
ஜிஜே 3991 (GJ 3991) ( கிளீசே 3991 மற்றும் ஜி 203-47 என்றும் அழைக்கப்படுகிறது) என்பது எர்குலெசு விண்மீன் தொகுப்பில் 24.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு இரும விண்மீன் அமைப்பு ஆகும். இது சூரியனின் பொருண்மையில் 20-30% கொண்ட செங்குறுமீனையும், சூரியனின் பொருண்மையில் தோராயமாக 50% கொண்ட வெண்குறுமீனையும் கொண்டுள்ளது. இரண்டு உறுப்புகளும் ஒன்றுக்கொன்று 0.11 வானியல் அலகுகள் மட்டுமே இறுக்கமான வட்டணையில் சுற்றுகின்றன. வட்டணை அலைவுநேரம் 14.71 நாட்கள் மட்டுமே. இவற்றின் சிறிய பிரிவின் காரணமாக, இரண்டு பொருட்களும் பார்வைக்கு ஒருபோதும் அகப்படுவதில்லை. ஜிஜே 3991ஏ விண்மீனின் ஆரத் திசைவேக மாற்றங்களிலிருந்து வெறுமனே கணிக்கப்படுகின்றன, இதனமைப்பை கதிர்நிரல்பதிவு இரும விண்மீன் அமைப்பாக மாற்றுகிறது.
ஜிஜே 3991 பி விண்மீன் 1997 ஆம் ஆண்டில் வானியலாளர்கள் ஐ.என். இரீடு, ஜே. ஈ. கிசிசுs ஆகியோரால் GJ 3991ஏ வழி காணக்கூடிய குறிப்பிடத்தக்க ஆரத் திசைவேக மாறுபாடுகள் வழி அடையாளம் காணப்பட்டது, இருப்பினும் இரண்டாம் நிலை பொருளின் தன்மையை அடையாளம் காண முடியவில்லை.[4] 1998ஆம் ஆண்டில், மற்றொரு குழுவான வானியலாளர்களால் இரண்டாம் நிலை குளிர் வெண்குறுமீனாகத் தீர்மானிக்க முடிந்தது, சூரியன் போன்ற குறைந்த பொருண்மை விண்மீனுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் கச்சிதமான எச்சம் ஆற்றலுக்கான உறுப்புகளை இணைக்க முடியாது. ஜிஜே 3991 பி, சிரியஸ் பி, புரோசியோன் பி, வான் மானென் 2, எல்பி 145-141, 40 எரிடானி பி, சுட்டைன் 2051 பி, ஜி 240-72, கிளீசே 223.2 ஆகியவற்றுக்குப் பிறகு, இது 9வது அருகில் உள்ள வெண்குறுமீனாமாகும். இவற்றில், ஜிஜே 3991 பி என்பது மிகவும் குளிர்வானது மட்டுமல்ல, மற்றொரு விண்மீனுடன் குறுகிய கால வட்டனையில் உள்ள ஒரே விண்மீனாகும். ஜிஜே 3991 பி 6 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இது இந்தப் பொருட்களிலேயே மிகவும் பழமையானது.[5]