ஜிம் லேக்கர்

ஜிம் லேக்கர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜிம் லேக்கர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 328)சனவரி 21 1948 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுபிப்ரவரி 18 1959 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 46 450
ஓட்டங்கள் 676 7,304
மட்டையாட்ட சராசரி 14.08 16.60
100கள்/50கள் 0/2 2/18
அதியுயர் ஓட்டம் 63 113
வீசிய பந்துகள் 12,027 101,370
வீழ்த்தல்கள் 193 1,944
பந்துவீச்சு சராசரி 21.24 18.41
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
9 127
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
3 32
சிறந்த பந்துவீச்சு 10/53 10/53
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/– 270/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 7 2009

ஜிம் லேக்கர் (Jim Laker, பிறப்பு: பெப்ரவரி 9 1922, இறப்பு: ஏப்ரல் 23 1986) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 46 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 450 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 - 1959 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஆலன் ஹில் 1998 இல் வெளியிடப்பட்ட இவரது வாழ்க்கை வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் வரை ஜிம் லேக்கரின் குடும்பப் பின்னணி சிக்கலானதாக இருந்தது. பல ஆண்டுகளாக, லேக்கர் சிறு வயதிலேயே ஆதரவற்றவராக நான்கு அத்தைகளால் வளர்க்கப்பட்டார் என்று பொதுவாக நம்பப்பட்டது. இந்த சுயசரிதையின் பின்னர் நீண்டகால தவறான புரிதல்கள் தீர்க்கப்பட்டன.ஹில் குடும்ப உறுப்பினர்களைக் கலந்தாலோசித்து உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது. இவரது வாழ்க்கை வரலாற்றின் முதல் இரண்டு அத்தியாயங்களில் இது பற்றிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. [1]

லேக்கரின் தாயார் 1878 ஆம் ஆண்டு பார்ன்ஸ்லி பகுதியில் பிறந்தார். இவர் எலன் ஆக்ஸ்பி என்று அழைக்கப்பட்டார் . இவர் ஒரு ரயில்வே தொழிலாளியின் மகள் ஆவார். இவர்கள் தென் யார்க்ஷயருக்கு தங்கள் சொந்த ஊரான லிங்கன்ஷையரிலிருந்து குடிபெயர்ந்தனர். 1898 ஆம் ஆண்டு எலனுக்கு 20 வயதாக இருந்தபோது, பிராட்போர்டில் அச்சிடல் பணியாற்றிய ஜேம்ஸ் ஹென்றி கேன் என்ற நபரை மணந்தார். அடுத்த சில ஆண்டுகளில், எலனுக்கு மோலி மற்றும் மார்கரெட் என்று இரண்டு மகள்கள் பிறந்தனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1906 ஆம் ஆண்டில், இவருக்கு டோரீன் என்ற மூன்றாவது மகள் பிறந்தார். அதே நேரத்தில், கேன் இவர்களை பிரிந்து சென்றார். ஆனால் இவர்கள் திருமண முறிவு பெறவில்லை. எனவே எல்லன் தொடர்ந்து எலன் கேன் என்று அறியப்பட்டார். [2]

எலன் தனது சகோதரி எமிலி ஆக்ஸ்பியினைப் போலவே குழந்தை மற்றும் இளைய குழந்தைகளின் பள்ளி ஆசிரியரானார். இவர் ஷிப்லி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரிந்தார். இது பிராட்போர்டுக்கு வடக்கே உள்ள ஐரிடேலில் உள்ளது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, சார்லஸ் ஹென்றி லேக்கர் என்பவருடன் இவர் உறவு பொருத்தத்தில் இருந்தார். [3] 1916 ஆம் ஆண்டில் இவர்களுக்கு சுசி எனும் மகள் பிறந்தார். பிப்ரவரி 1922 இல், குடும்பம் ஷிப்லியில் 36, நோர்வூட் சாலையில் வசித்து வந்தது, அங்குதான் சார்லி என்று முதலில் அழைக்கப்பட்ட ஜிம் லேக்கர் பிறந்தார். [4] 1924 ஆம் ஆண்டில், சார்லஸ் லேக்கர் எலனை விட்டு சென்றார். இது நடந்தபோது ஜிம்மிற்கு இரண்டு வயது ஆகும். இவரது தந்தை இறந்துவிட்டார் என்று இவருக்கு கூறப்பட்டது. இவர் தனது தந்தையை நினைவுபடுத்தவில்லை என்றும் இவரைப் பற்றிய புகைப்படம் கூட பார்த்ததில்லை என்றும் இவர் கூறினார்.

1980 களில், ஜிம் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது தந்தை பர்னால்ட்ஸ்விக் நகருக்குச் சென்று 1931 ஆம் ஆண்டில் உள்நாட்டில் ஒரு கல் மேசனாக பணிபுரிந்த பின்னர் இறந்தார் என்பதைக் கண்டுபிடித்தார். 1924 இல், எல்லன் கால்வர்லியில் உள்ள தேவாலய பள்ளியில் பணிபுரிந்தார். மோலியும் மார்கரெட்டும் வீட்டை விட்டு வெளியேறிவிட்ட போதிலும் இவர்கள் ஷிப்லி பகுதியில் வசித்து வந்தனர். [5]

1930 ஆம் ஆண்டுகளில், எலன் ஃபிரிசிங்ஹால் கவுன்சில் பள்ளியில் பணிபுரிந்தார். அங்கு ஜிம் 1932 ஆம் ஆண்டு வரை படித்தார். [6] இவர் கல்வியில் சிறந்து விளங்கினார் மேலும் தனது தாயின் வழிகாட்டுதலின் பேரில் இவர் இலக்கண பள்ளி உதவித்தொகையை வெல்ல முடிந்தது. இது இவருக்கு அருகிலுள்ள சால்டேரில் உள்ள சால்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் இலவச கல்வி பெற உதவியது.[7] இவர் செப்டம்பர் 1932 இல் சால்ட்ஸில் சேர்ந்தார், அங்கு ஏழு ஆண்டுகள் இருந்தார்[8]

துடுப்பாட்ட வாழ்க்கை

[தொகு]

ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆகக் கூடிய இலக்குகளை (விக்கெட்) வீழ்த்தியவர் என்ற பெருமைக்குரியவர். ஓல்ட் ட்ரபோட் மைதானத்தில் 1956 ஆம் ஆண்டின் ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லேக்கர் இந்த சாதனையை நிலைநாட்டினார். அந்தப் போட்டியில் இவர் 90 ஓட்டங்களைக் கொடுத்து 19 இலக்குகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணிக்காக 46 டெஸ்ட் போட்டியில் (193 இலக்குகள்) பங்கேற்றுள்ள ஜிம் முதல் தர போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 1,944 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். 1956 ஓல்ட் டிரேஃபோர்ட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தான் இவர் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி உலக சாதனைப் படைத்தார். முதல் இன்னிங்ஸில் ஒன்பது இலக்குகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 10 இலக்குகளும் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஏழு போட்டிகளில் பங்கேற்றுள்ள ஜிம் லேக்கர் மொத்தம் வீழ்த்திய இலக்குகள் மட்டும் 63. அதாவது சராசரியாக 10 ஓட்டங்களுக்கு ஒரு இலக்கு என்ற விகிதத்தில் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிம் லேக்கர் 11 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக விளையாடியிருந்தாலும் காயங்கள் அதிகம் ஏற்பட்டதால் மிகுதியான போட்டியில் இவர் பங்கேற்கவில்லை. துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட பின் வர்ணனையாளராக மாறினார்.

ஜிம் லேக்கர் 1986ல் லண்டன் நகரில் பட்னி என்ற இடத்தில் இயற்கை எய்தினார். ஜிம் லேக்கரின் சாதனையை தான் இந்திய சூழல் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. Hill, pp. xiv–xv & 1–36.
  2. Hill, p. 2.
  3. Hill, p. 3.
  4. Hill, p. 1.
  5. Hill, pp. 6–7.
  6. Hill, p. 6.
  7. Hill, p. 7.
  8. Hill, p. 8.