ஜியோவன்னா தினெத்தி Giovanna Tinetti | |
---|---|
![]() | |
பிறப்பு | 1 ஏப்பிரல் 1972 தூரின் |
கல்வி | தூரின் பல்கலைக்கழகம் |
பணியகம் | இலண்டன் பல்கலைக்கழக்க் கல்லூரி |
அறியப்படுவது | புறவெளிக் கோள்கள் |
ஜியோவன்னி தினெத்தி (Giovanna Tinetti) (பிறப்பு: 1 ஏப்பிரல் 1972) ஓர் இலண்டனில் வாழும் இத்தாலிய இயற்பியலாளர் ஆவார். இவர் இலண்டன் பல்கலைக்கழக்க் கல்லூரியில் இயற்பியல், வானியல் துறைப் பேராசிரியராக உள்ளார். இவர் பால்வெளிக் கோள்கள், புறக்கோள்கள், வளிமண்டல அறிவியல் புலங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.
இவர் 1972 இல் இத்தாலியில் உள்ள தூரின் நகரத்தில் பிறந்தார்.[1] இவர் தூரின் பல்கலைக்கழகத்தில் 1997 இல் வானியற்பியலில் முதுகலைப் பட்டமும் 1998 இல் பாய்ம இயங்கியலிலும் ஆற்றலியலிலும் மூதறிவியல் பட்டமும் பெற்றார். இவர்2003 இல் கோட்பாட்டு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவரது ஆய்வு வழிகாட்டியாக பேராசிரியர் இலியூகோ செர்த்தோரியோ விளங்கினார்.[2]
2011 – மோசுலே பதக்கமும் பரிசும் இயற்பியல் நிறுவனம்[3]
2009 – மார்க் சுவெய்ன், கவுதம் வசித்து ஆகிய இருவருடன் இணைந்து நாசா குழு சாதனை விருது [4]
2009 – எட்வார்டு சுட்டோன் விருது, தாரைச் செலுத்த ஆய்வகம்[5]
1999 - இளம் இத்தாலிய இயற்பியலாளருக்கான SIF விருது, இத்தாலிய இயற்பியல் கழகம்[4]
1998 – சிறந்த மூதறிவியல் ஆய்வுரைக்கான ENEA விருது, ஆற்ரல், சுற்றுச்சூழலியலுக்கான இத்தாலியத் தேசிய முகமை[1]