ஜீ மராத்தி | |
---|---|
![]() | |
தொடக்கம் | 15 ஆகத்து 1999 (அல்பா மராத்தி) 27 மார்ச் 2005 (ஜீ மராத்தி) |
உரிமையாளர் | ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் எசெல் குழு |
சுலோகம் | உங்க மராத்தி ஜீ மராத்தி |
நாடு | இந்தியா |
மொழி | மராத்தி |
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
முன்னைய பெயர் | அல்பா மராத்தி (1999-2004) |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
ஜீ மராத்தி என்பது ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மராத்திய மொழி பொழுதுபோக்கு அலைவரிசை ஆகும்.[1][2] இது மகாராட்டிரத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. மராத்தி மக்களால் அதிகளவு பார்க்கப்படும் தொலைக்காட்ச்சியில் இதுவும் ஒன்றாகும். இது 1999 ஆம் ஆண்டு அல்பா மராத்தி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு ஜீ மராத்தி என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த தொலைக்காட்சியில் தொடர்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்து வருகின்றது. இந்த தொலைக்காட்சி நவம்பர் 20, 2016 ஆம் ஆண்டு உயர் வரையறு தொலைக்காட்சியாக மாற்றப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[3]