ஜீவா | |
---|---|
![]() | |
பிறப்பு | கோச்சார்லா தயாரத்திணம் 30 நவம்பர் 1952 ஆந்திரப் பிரதேசம், குண்டூர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1975–தற்போதுவரை |
ஜீவா (பிறப்பு: 30, நவம்பர், 1952) என்பவர் ஒரு இந்திய திரைப்பட குணச்சித்திர நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்குத் திரைப்படங்கள் மற்றும் இந்தியில் துணை பாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவர் 1978 முதல் திரைப்படத் துறையில் பணியாற்றி வருகிறார். மேலும் ராம் கோபால் வர்மாவின் பல்வேறு படங்களில், குறிப்பாக சத்யா (ஜக்காவாக), அபக் தக் சப்பன் (ஆணையர் சுச்சாகாக) மற்றும் சர்க்கார் (சுவாமி வீரேந்திராவாக) போன்ற படங்களில் எதிர்மறையான பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்.[1] தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 250 திரைப்படங்களில் நடித்துள்ளார்.[சான்று தேவை]
இவர் கோச்சார்லா தயாரத்திணமாகப் 30 நவம்பர் 1952 பிறந்தார். இவர் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது முதல் படத்திற்குப் பிறகு இவரது பெயரை கே. பாலசந்தர் ஜீவா என்று மாற்றினார். இவர் இதே பெயரைத் தனது பெயராக மாற்றிக்கொண்டார்.[2] இவர் தனது மகனுக்கு கே. பாலசந்தர் என்று பெயரிட்டார். இவரது மகன் தெலுங்குத் திரைப்படங்களின் இயக்குநராக உள்ளார். அவருக்கு ஏழு உடன்பிறப்புகள் உள்ளனர்.[சான்று தேவை]
இவர் கே. பாலசந்தர் இயக்கிய எங்க ஊரு கண்ணகி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த வேடத்திற்கு இவர் பலரை சலித்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் ராம் கோபால் வர்மா, வம்சி, கிருஷ்ணா வம்சி, பூரி ஜெகன்நாத் போன்ற பிரபல இயக்குனர்களுடன் பணியாற்றினார்.[2]