ஜீவ்ராம் ஜோசி | |
---|---|
பிறப்பு | ஜீவ்ராம் பவானிசங்கர் ஜோசி 6 சூலை 1905 Garani village near Jasdan, அம்ரேலி மாவட்டம் than under பரோடா அரசு of குசராத்து |
இறப்பு | 2004 அகமதாபாது, குஜராத் |
தொழில் | எழுத்தாளர் |
மொழி | குஜராத்தி |
தேசியம் | இந்தியன் |
குடியுரிமை | இந்தியா |
குடும்பத்தினர் | பவானிசங்கர் (தந்தை) சந்தோக்பென் (தாய்) |
ஜீவ்ரம் பவானிசங்கர் ஜோசி ( Jivram Bhavanishankar Joshi ஜூலை 1905 - 2004) என்பவர் குஜராத்தி சிறுவர் இலக்கியத்தின் ஆசிரியர் ஆவார்.[1]
இவர் ஜூலை 6, 1905இல் குசராத்,அம்ரேலி மாவட்டம், கரணி எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சந்த்கோபன்- பவானி சங்கர் ஆவர். இவரும் இவரது சகோதரரும் பனோசரா கிராமத்தில் கல்வி பயின்றனர். இவர் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது இவரது தந்தை இறந்தார். சிறு வயதிலேயே சௌவுராஷ்டிராவிலிருந்து அகமதாபாத் சென்றார். அகமதாபாத்தில் மூன்று நுழைவாயிகளுக்கு அருகிலுள்ள பால்வந்த்ரே தாகூரின் தனியுரிம பள்ளியில் கல்வி பயின்றார். ராம்நாராயண் வி. பதக்கின் வீட்டில் சமையல்காரராக பணியாற்றினார். 1927 இல் காஷியில் சமஸ்கிருதம் மற்றும் ஆங்கில மொழிகளைப் பயின்றார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் 2004 இல் காலமானார்.[சான்று தேவை]
ஜோஷி குழந்தைகளுக்காக ஏராளமான இலக்கியங்களை எழுதினார். இவர் பல கற்பனைக் கதாபாத்திரங்களை உருவாக்கினார். மியா புஸ்கி, சாகோ மாகோ, சேல் சாபோ, அடுகியோ தாதுக்கியோ போன்ற கதாப்பத்திரங்கள் குழந்தைகளிடையே பிரபலமானது.[2] மியா புஸ்கியின் 30 அத்தியாயங்கள், சாகோ மாகோவின் 10 அத்தியாயங்கள், சேல் சாபோவின் 10 அத்தியாயங்கள், அடுகியோ தாதுக்கியோவின் 10 அத்தியாயங்கள் போன்ற தொடர் அத்தியாயங்களை இவர் எழுதினார். மியான் புஸ்கி முதன்முதலில் 1946 இல் வெளியானது.[3] இவரது தபா பட், ராணி சதுரா, ராஜா விக்ரம் ஆகியோரின் கதைகளும் பிரபலமாக உள்ளன.[3][4][5]
2008 ஆம் ஆண்டில் அடுகியோ தாதுக்கியோ அனே கலு ஜாதுகர் ஆகிய கதாப்பாத்திரங்கள் திரைப்படங்களாக வெளியாகின.[6] மியா புஸ்கி கதாபாத்திரங்கள் நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்களாக வெளியாகின.[7]