ஜுக்ரா | |
---|---|
Jugra | |
![]() ஜுக்ரா கலங்கரை விளக்கம் | |
ஆள்கூறுகள்: 2°49′N 101°25′E / 2.817°N 101.417°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கோலா லங்காட் மாவட்டம் |
நிர்வாக மையம் | பந்திங் |
அரசு | |
• ஊராட்சி | கோலா லங்காட் ஊராட்சி (Kuala Langat District Council) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே +8 |
அஞ்சல் குறியீடு | 42700[1] |
தொலைபேசி எண்கள் | ++60-03 3185 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
ஜுக்ரா (மலாய்: Jugra; ஆங்கிலம்: Jugra; சீனம்: 蚶山) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோலா லங்காட் மாவட்டத்தில் (Kuala Langat District) உள்ள ஒரு வரலாற்று நகரம். கேரி தீவில் இருந்து லங்காட் ஆற்றினால் (Langat River) பிரிக்கப்பட்டு உள்ளது.[2]
இந்த நகரம் கோலா லங்காட் மாவட்ட ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் கீழ் (Kuala Langat Municipal Council) உள்ளது. இதன் அருகில் உள்ள நகரங்கள் கேரி தீவு, காஞ்சோங் டாராட் (Kanchong Darat), பந்திங், செஞ்சாரோம் (Jenjarom) மற்றும் சுங்கை புவாயா (Sungai Buaya).[2]
ஜுக்ரா நகரம் மலாக்கா நீரிணையை எதிர்கொள்கிறது; மற்றும் லங்காட் ஆற்றின் முகத்துவாரத்திற்க்கு அருகில் உள்ளது. ஜுக்ரா நகர்ப்புறத்தில் புக்கிட் ஜுக்ரா (Bukit Jugra), கெலானாங் கடற்கரை (Kelanang Beach), ஆராக் ஆற்றுக் கிராமம் (Arak River Village) மற்றும் சோடோய் கிராமம் (Chodoi Village) ஆகிய கிராமப் புறங்கள் உள்ளன.
ஜூக்ரா என்ற பெயர் மலேசியப் பழங்குடியினர் மக்களான செனோய் (Senoi), ஜுக்கிரா (Jukrah) அல்லது ஜுருக்கிரா (Jurukrah) பழங்குடி மக்களின் சிறுதலைவர்களுக்கு (Small Level Officials) வழங்கப்பட்ட தலைவர் தகுதிப் பெயரில் இருந்து உருவானது என்பதை மானுடவியல் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.[3][4]
மற்றும் இது மலாய் மொழி சொல்லான ஜுருக்கிராவுடன் தொடர்புடையது. அத்துடன் ஜுக்ரா என்பது அசல் மா மேரி (Mah Meri) பழங்குடியினர் மொழியில் சுகரி (Sugere) என்றும் குறிப்பிடப் படுகிறது.[5][6]
முன்பு காலத்தில் ஜூக்ரா நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் அரசத் தலைநகரமாக இருந்தது. அப்போதைய சிலாங்கூர் சுல்தான் அப்துல் சமாத் (Sultan Abdul Samad), ஜுக்ரா அரண்மனையை (Istana Jugra) ஜூக்ராவில் 1875-ஆம் ஆண்டில் கட்டி, அங்கு குடிபெயர்ந்தார்.
அந்த அரண்மனை ஓர் உத்திநோக்கு இடத்தில் (Strategic Location) அமைந்து இருந்தது. ஆனாலும் லங்காட் ஆற்றின் முகத்துவாரத்தில் அமையாமல்; மலாக்கா நீரிணையில் இருந்து எளிதில் அணுகக்கூடிய இடத்தில் அமைந்து இருந்தது.[7]
ஜுக்ரா குன்று (Bukit Jugra) என்பது தாழ்வான சதுப்புநில சதுப்பு நிலங்களுக்கு மேலே உள்ளது. பல நூற்றாண்டுகளாக மலாக்கா நீரிணையைப் பயன்படுத்திய கடலோடிகளுக்கு ஒரு வழக்கமான அடையாளமாக விளங்கியது.[7]
சீன, அரேபிய மற்றும் ஐரோப்பிய கடலோடிகள் அந்தக் குன்றைத் தங்கள் வரைபட அட்டவணையில் குறித்து வைத்து இருந்தனர். வெளிநாட்டுக் கடலோடிகள் ஜுக்ரா குன்றை பார்சிலர் குன்று (Parcelar Hill) என்றும் அழைத்தனர்.[7]
இந்தக் கட்டத்தில்தான் ஜுக்ரா நகரம், சிலாங்கூர் மாநில பிரித்தானிய நிர்வாகத்தின் மையமாக மாறியது. இருப்பினும் விரைவில் அந்த நிர்வாக மையம் கிள்ளான் நகருக்கும்; பின்னர் கோலாலம்பூருக்கும் மாற்றப்பட்டது.
சிலாங்கூர் சுல்தான் அப்துல் சமாத் 1898-இல் இறக்கும் வரையில் ஜுக்ராவில் தான் தொடர்ந்து வாழ்ந்தார். மேலும் அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த சுல்தான் அலாவுதீன் சுலைமான் சா (Sultan Sulaiman of Selangor) என்பவரும், ஜுக்ரா அரண்மனையில் தான் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார். அதுவே ஜுக்ராவின் கடைசி முக்கிய நிகழ்வு ஆகும்.
1905-இல் சுல்தான் அலாவுதீன் சுலைமான் சா, தன் அதிகாரப்பூர்வ இல்லத்தை வடக்கே கிள்ளானில் உள்ள ஆலாம் சா அரண்மனைக்கு (Istana Alam Shah) மாற்றினார். அங்கு அவர் தொடர்ந்து 35 ஆண்டுகள் வாழ்ந்தார்.
அதன்பிறகு, ஜுக்ராவில் இருந்த கோலா லங்காட் மாவட்டத்தின் நிர்வாகம் பந்திங்கிற்கு மாற்றப்பட்டது. காலப் போக்கில் ஜுக்ரா நகரம் தன் வரலாற்றுப் பொலிவையும் இழந்தது.[8]
ஜுக்ரா தமிழ்ப்பள்ளியில் 148 மாணவர்கள் பயில்கிறார்கள்; 15 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 2020-ஆம் ஆண்டில் மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள். [9]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
BBD1054 | ஜுக்ரா (Jugra) |
SJK(T) Ldg Jugra, Banting[10] | ஜுக்ரா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 41050 | பந்திங் | 148 | 15 |