ஜுரு | |
---|---|
Juru | |
![]() வான்வழிக் காட்சியில் ஜூரு நகரம்; கெடோங் தீவு; அமான் தீவு | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 5°19′00″N 100°27′00″E / 5.31667°N 100.45000°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | மத்திய செபராங் பிறை |
உருவாக்கம் | 1900 |
அரசு | |
• உள்ளூராட்சி | செபராங் பிறை |
• நகராண்மைக் கழகத் தலைவர் | ரொசாலி முகமட் |
• பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதி | கஸ்தூரி பட்டு (ஜ.செ.க) |
• புக்கிட் தெங்கா சட்டமன்றத் தொகுதி | குய் சியோ லியோங் (பி.கே.ஆர்) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 14000 |
மலேசியத் தொலைபேசி | +6045 |
மலேசியப் போக்குவரத்து எண் | P |
ஜுரு (ஆங்கிலம்: Juru; மலாய்: Juru; சீனம்: 柔府); என்பது மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இந்த நகரத்திற்கு தென்மேற்கில் புக்கிட் மெர்தாஜாம்; பிறை நகரங்கள் உள்ளன.
கம்போங் ஜூரு எனும் கிராமத்தின் பெயரால் இந்த நகருக்கும் பெயரிடப்பட்டது. அதே வேளையில், கம்போங் ஜூரு கிராமத்திற்கு சுங்கை ஜூரு எனும் ஜூரு ஆற்றின் பெயரால் பெயரிடப்பட்டது.[1]
புவியியல் ரீதியாக இந்த நகரம், மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் உள்ள புக்கிட் மெர்தாஜாம் நகரின் ஒரு பகுதியாகும்.
இந்த ஜுரு நகரம் பட்டர்வொர்த் நகரத்தையும்; பாயான் லெப்பாஸ் நகரத்தையும்; வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா) மூலமாக இணைக்கின்றது.
மலேசிய வடக்கு-தெற்கு விரைவுசாலையின் ஒரு பிரதான அமைப்பில் அமைந்து இருப்பதாலும்; பினாங்குத் தீவிற்கு மிக அருகில் இருப்பதாலும்; இந்த நகரம் பிரபலம் அடைந்தது.
இங்குள்ள ஆட்டோ சிட்டி (Auto City) எனும் குறுநகரம்; வாகன விற்பனைக்குப் புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. வாகனங்கள் விற்பனைக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு சிறிய நகரமாக இந்த ஆட்டோ சிட்டி அறியப் படுகிறது.[2]
ஜுரு நகரம் கோலாலம்பூரில் இருந்து 330 கி.மீ தொலைவிலும்; பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகரில் இருந்து 17 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்குள்ள ஜூரு ஆறு ஒரு முக்கியமான ஆறாகும்.
புவியியல் ரீதியாக இந்த நகரம், மத்திய செபராங் பிறையில் உள்ள புக்கிட் மெர்தாஜாம் நகரின் ஒரு பகுதியாகும். பெருமளவில் தொழில் மயமாக்கப்பட்ட புக்கிட் தெங்கா (Bukit Tengah) மற்றும் புக்கிட் மின்யாக் (Bukit Minyak) போன்ற பல பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.