![]() ஜுவாங் இளைஞர்களின் ஓவியம், ஆண்டு 1872 | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
47,095 (2011)[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() ஒடிசா | |
மொழி(கள்) | |
ஜுவாங் மொழி | |
சமயங்கள் | |
இந்து சமயம்• சர்னா சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
முண்டா மக்கள், சந்தாலிகள், ஹோ மக்கள் |
ஜுவாங் மக்கள் (Juang people), ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் உட்பிரிவான முண்டா மொழிகளில் ஒன்றான ஜுவாங் மொழியைப் பேசும் பழங்குடி மக்கள் ஆவார். ஜுவாங் மக்கள் இந்தியாவின் ஒடிசாவின் கேந்துசர் மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் அதிகம் வாழ்கின்றனர். இம்மக்களில் ஒரு பகுதியினர் டேங்கானாள் மாவட்டத்தில் வாழ்கின்றனர். இட ஒதுக்கீடு கிடைப்பதற்காக இந்திய அரசால் ஜுவாங் மக்களை பட்டியல் பழங்குடி வகுப்பில் சேர்த்துள்ளனர்.