ஜூலி கரோலின் கோல்மேன் (Julie Caroline Hollman) (பிறப்பு: 1977 பிப்ரவரி 16 பீட்டர்பரோ ) இங்கிலாந்தின் பீட்டர்பரோவில் பிறந்த இவர் ஓர் ஆங்கில ஹெப்டாத்லான் வீரராவார். .
இவர் டீப்பிங் செயின்ட் ஜேம்ஸ் என்ற இடத்தில் வளர்ந்தார். தி டீப்பிங்ஸ் பள்ளியில் பயின்றார் . இவரது சகோதரி அன்னேயும் ஒரு ஹெப்டாத்லான் வீரராவார். இவரது தாயார் கரோல் பீட்டர்பரோ தடகள கிளப்பில் புரூனல் பல்கலைக்கழகத்தில் புவியியலும் சுற்றுச்சூழல் சிக்கலும் என்றப் பாடத்துடன் விளையாட்டு அறிவியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். [1]
இவர் 2002 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஐந்தாவது இடத்தையும், 2003 உலகப் போட்டிகளில் பதினான்காவது இடத்தையும், 2006 பொதுநலவாய போட்டிகளில் ஆறாவது இடத்தையும் பிடித்தார். [2] மேலும், 2008 ஒலிம்பிக் போட்டிகளில் 32 வது இடம் பிடித்தார். இவர் போட்டியிட்ட மகளிர் டெகத்லானுக்கு பிரிட்டிசு சாதனை படைத்தவராவராக இருந்தார்.
இவரது தனிப்பட்ட சிறந்த முடிவு 6135 புள்ளிகள். இது 2002 சூன் மாதத்தில் கோட்சியில் அடைந்தார். இவர் பிர்ச்ஃபீல்ட் ஆரியர்ஸ் அணியின் உறுப்பினராக இருக்கிறார்.