ஜூலியன் ஆல்பிரட் ஸ்டியர்மார்க் (Julian Alfred Steyermark) (ஜனவரி 27, 1909 - அக்டோபர் 15, 1988) ஒரு அமெரிக்க தாவரவியலாளர். இவரது கவனம் புதிய தாவர உலகத்தில் இருந்தது. மேலும் இவர் காஃபி குடும்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.[1]
ஜூலியன் , செயின்ட் லூயிஸ் என்னுமிடத்தில் தொழிலதிபரான லியோ எல். ஸ்டியர்மார்க் மற்றும் மாமி ஐ. ஸ்டியர்மார்க் என்பாருக்கு மகனாகப் பிறந்தார்.[2] புனித லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஹென்றி ஷா தாவரவியல் பள்ளியில் படித்து, 1933 இல் தனது முனைவர் பட்டம் பெற்றார்.
இவருடைய வாழ்க்கையில் சிகாகோவில் உள்ள கள அருங்காட்சியகம், கராகஸ் இல் உள்ள இன்ஸ்டியுடோ பொட்டானிகாவிலும் பணியாற்றி இருக்கிறார். மேலும் புனித லூயிஸில் உள்ள மிசோரி தாவரவியல் பூங்காவில் 1984 முதல் இவரது இறப்பு வரை பணியாற்றினார். வெனிசூலா குயானாவின் தாவரங்கள், மிசோரியின் தாவரங்கள் மற்றும் குவாத்தமாலாவின் தாவரங்கள் போன்றவை ஸ்டியர்மேக்கரின் முக்கிய படைப்புகளாகும் .
ஸ்டியர்மார்க் தன்னுடைய வாழ்நாளில், 130,000 தாவரங்களை இருபத்தி ஆறு நாடுகளில் இருந்து சேகரித்திருந்தார். இது இவருக்கு கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் ஒரு நுழைவைப் பெற்றுத் தந்தது.[3] இவர் ஆரம்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 38 பேரினங்களையும், மற்றும் 1,864 சிற்றினங்களையும், 2,392 தாவரங்களின் வகைகளையும் விளக்கினார்.[3] தாவரங்களுக்கு தாவரவியல் பெயரை குறிப்பிடும் போது ஸ்டியர்மார்க் என நிலையான குறிப்பிடுதல் முறையைப் பயன்படுத்த வேண்டும்.[4] இவரை கௌரவிக்கும் வகையில் ஒரு தாவர பேரினத்திற்கு ஸ்டியர்மார்க்கியா எனப் பெயரிடப்பட்டது.[5]
இவருடைய நினைவாக ஒரு தென் அமெரிக்க பாம்பு இனத்திற்கு அட்ராக்டஸ் என்னும் அறிவியல் பெயர் சூட்டப்பட்டது.[6]