ஜூலீ காய்னேசு உலுட்சு (Julie Haynes Lutz) ஓர் அமெரிக்க வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் கோள் வளிம ஒண்முகில்களையும் ஒன்றிய இரும விண்மீன்களையும் ஆய்வு செய்கிறார்.[1]:{{{3}}} இவர் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் போயிங் தகைமை கணிதவியல், அறிவியல் கல்வி பேராசிரியரும் வானியல் திட்ட இயக்குநரும் ஆவார்.[2]:{{{3}}} இவர் 2000 இல்லிவர் வாசிங்டன் பல்கலைக்கழ்கத்துக்குச் சென்று அங்கு உயர்தகமைப் பேராசிரிராகப் பணியாற்றுகிறார்.[1]:{{{3}}}
இவர் இளவல் பட்டப் படிப்பைச் சாந்தியாகோ அரசு பல்கலைக்கழகத்தில் படித்தார்; முனைவர் பட்டத்தைஅர்பானா சாம்பைனில் உள்ள இல்லினாயிசு பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[2]:{{{3}}} இவர் அங்கு மாணவராக இருந்தபோது உடன் படித்த வானியல் மாணவராகிய தாமசு ஈ. உலுட்சைச் சந்தித்து திருமணம் செய்துகொண்டுளார்.[3]:{{{3}}}
இவர் 1971 இல் வாழ்சிங்டன் அர்சு பல்கலைக்கழகத்தில் புல உறுப்பினராக்ச் சேர்ந்தார். இங்கு இவர் 1992 முதல் 1996 வரை தனி, பயன்முறைக் கணிதவியல் துறையின் தலைமையேற்றுள்ளார். மேலும் இவர் தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி அறிவியல் கல்வி மேம்பாட்டிலும் ஈடுபட்டார்.[2]:{{{3}}} இவர்1991 முதல் 1993 வரை பசிபிக் வனியல் கழகத்தின் தலைவரக இருந்துள்ளார்.[2]:{{{3}}}[4]:{{{3}}}
இவர் அரசு வானியல் கழகத்திலும்[5]:{{{3}}} அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்திலும் ஆய்வுறுப்பினரக இருந்துள்ளார்.[2]:{{{3}}}
ஒன்றிய நீக்ரோ கல்லூரி நிதி 2004 இல் இவருக்கும் இவரது கணவருக்கும் வானியலாளர் ஜார்ஜ் வாலர்சுட்டீனூக்கும் நிறுவன வளர்ச்சிக்காக நெடுங்காலமாக நிதி திரட்டியமைக்காக குடியரசுத் தலைவர் விருதை அளித்தது.[6]:{{{3}}}
{{citation}}
: Check date values in: |accessdate=
and |archive-date=
(help)