ஜெ. சாந்தா J. Shantha | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை | |
பதவியில் பதினைந்தாவது மக்களவை.[1] | |
முன்னையவர் | காலி கருணாகர ரெட்டி |
பின்னவர் | பி. சிறீராமுலு |
தொகுதி | பெல்லாரி, கருநாடகம்[1] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூன் 1973[1] பெல்லாரி, (கருநாடகம்). | .
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி.[1] |
பிள்ளைகள் | 1 மகள் |
பெற்றோர் | பி. திம்மப்பா (அப்பா), பி. கண்ணுரம்மா (அம்மா) |
வாழிடம் | பெல்லாரி & புது தில்லி[1] |
தொழில் | சமூகசேவகர், அரசியல்வாதி[1] |
செயற்குழு | உறுப்பினர், நீர் வளக் குழு |
ஜெ. சாந்தா (J. Shantha) என்பவர் இந்திய அரசியல்வாதியும் கருநாடக மாநில நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர் ஆவார். இவர் கருநாடகாவின் பெல்லாரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர். மேலும் சாந்தா ஸ்ரீராமுலுவின் சகோதரி ஆவார்.
சாந்தா கருநாடகாவின் பெல்லாரியில் பிறந்தார். இடைநிலைக் கல்வி வரை பயின்றுள்ளார்.
சாந்தா, பட்டியல் சாதியினருக்குஒதுக்கப்பட்ட பெல்லாரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2018 ஆம் ஆண்டு பெல்லாரி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் இம்முறை 240,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
# | முதல் | வரை | பதவி |
---|---|---|---|
01 | 2009 | 2014 | நாடாளுமன்ற உறுப்பினர், பதினைந்தாவது மக்களவை |
02 | 2009 | 2014 | நீர்வளக் குழு உறுப்பினர் |