ஜெகதீஷ் சரண் வர்மா | |
---|---|
![]() நீதியரசர் ஜெகதீஷ் சரண் வர்மா, ஆண்டு 2011 | |
27வது இந்தியத் தலைமை நீதிபதி | |
பதவியில் 25 மார்ச் 1997 – 18 சனவரி 1998 | |
முன்னையவர் | அஜீஸ் முசாப்பர் அகமதி |
பின்னவர் | மதன் மோகன் பூஞ்சி |
தலைவர், இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் | |
பதவியில் 4 நவம்பர் 1999 – 17 சனவரி 2003 | |
நீதியரசர், இந்திய உச்ச நீதிமன்றம் | |
பதவியில் சூன் 1989 - 24 மார்ச் 1997 | |
தலைமை நீதியரசர், இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் | |
பதவியில் செப்டம்பர் 1986 - சூன் 1989 | |
தலைமை நீதியரசர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் | |
பதவியில் சூன் 1985 - செப்டம்பர் 1986 | |
நீதியரசர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் | |
பதவியில் சூன் 1972 - சூன் 1985 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 சனவரி 1933 சத்னா, மத்திய மாகாணம் மற்றும் பேரர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 22 ஏப்ரல் 2013 (வயது 80) குருகிராம், அரியானா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துணைவர் | புஷ்பா |
பிள்ளைகள் | 2 |
முன்னாள் மாணவர் | அலகாபாத் பல்கலைக்கழகம் |
நீதியரசர் ஜெகதீஷ் சரண் வர்மா அல்லது ஜெ. எஸ். வர்மா (Jagdish Sharan Verma) (18 சனவரி 1933 – 22 ஏப்ரல் 2013) இந்திய உச்ச நீதிமன்றத்தில் 27வது தலைமை நீதிபதியாக 25 மார்ச் 1997 முதல் 18 சனவரி 1998 முடிய பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக 1999 முதல் 2003 முடிய பணியாற்றினார். கர்நாடகா முதல் பொம்மை வழக்கில், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356ன் கீழ் மாநில அரசுகளை கலைப்பது குறித்து விரிவான தீர்ப்பு வழங்கினார்.[1]இவரது தீர்ப்பால் இந்திய அரசு, மாநில அரசுகளை தன்னிச்சையாக கலைக்க இயலாமல் போயிற்று.
இவர் 2012 தில்லி கும்பல் பாலியல் வல்லுறவு வழக்கிற்குப் பின்னர் குற்றவியல் சட்டங்களில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து இந்திய அரசுக்கு 2013ஆம் ஆண்டில் மூன்று நபர்கள் கொண்ட வர்மா ஆணையம் பரிந்துரை செய்தது.[2][3][4] [5] [6]
இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகளில் ஏற்பட்ட குறைபாடுகளை விசாரணை செய்தவற்கும், இனிவரும் காலங்களில் இந்திய அரசு குறிப்பிடும் மிகமிக முக்கிய நபர்களின் பாதுகாப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யவும் நீதியரசர் ஜெகதீஷ் சரண் வர்மா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மனிதப் பெண்வெடிகுண்டும், கொலையாளியுமான தனு எனும் தேன் மொழி இராசரத்தினத்தை, இராஜீவ் காந்தியிடமிருந்து குறைந்த பட்சம் 10 முதல் 30 அடி தொலைவிற்கு அகற்றி வைத்திருப்பின் இராஜீவ் காந்தி கொலையே நடந்திருக்காது என்றும் வர்மா ஆணையம் கருத்து தெரிவித்தது.
இராஜீவ் காந்தியை பார்க்க வந்த பெண்களை பாதுகாப்புப் பணியாளர்களால் அரிதாகவே சோதனை செய்ததையும், இராஜீவ் கொலையாளி [[தேன்மொழி இராசரத்தினம்|தனு] மாலையுடன் உள்ளே நுழைந்து இராஜீவைத் தடையின்றி அடைந்ததையும் புகைப்படங்கள் காட்டுகிறது என்றும், அவள் தன்னையும் ராஜீவையும் வெடிக்கச் செய்ய முற்பட்டதால் ஒட்டுமொத்த பாதுகாப்பு அமைப்பும் சரிந்தது என்றும் வர்மா ஆணையம் கருத்து தெரிவித்தது.
இராஜீவின் பாதுகாப்புத் தேவைகளின் கவனம் செலுத்தாத இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, மரகதம் சந்திரசேகர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் பிடியில் இராஜீவ் சிக்கியதாகவும் வர்மா குற்றம் சாட்டியுள்ளார். "தங்கள் தேர்தல் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே ராஜீவ் காந்தியின் வருகையைப் பயன்படுத்துவது மட்டுமே அவர்களின் அணுகுமுறையாக இருந்தது என்றும் கருத்து தெரிவித்தார். ஆனால் வரமா ஆணையத்தின் அறிக்கையை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடவில்லை.