ஜெகன்நாதர் கோயில் | |
---|---|
![]() ஜெகன்நாதர் கோயில் நுழைவாயில் | |
ஜெகன்நாதர் கோயில் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | செங்கல்பட்டு |
அமைவு: | ரெட்டிக்குப்பம் சாலை, புது மகாபலிபுரம் சாலை, கானத்தூர், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள்: | 12°51′01″N 80°14′37″E / 12.8502325°N 80.2435036°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கலிங்கக் கட்டிடக்கலை |
இணையதளம்: | http://jagannathshrinechennai.com/index.html |
சென்னை புரி ஜெகந்நாதர் கோயில் (Jagannath Puri Temple Chennai), ஜெகந்நாதர், பலராமர் மற்றும் சுபத்திரை ஆகிய தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், லத்தூர் ஊராட்சி ஒன்றியம், கானத்தூர் ஊராட்சியில் உள்ள கானத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் கலிங்கக் கட்டிடக் கலையில் கருங்கற்களால் ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் போன்று 26 சனவரி 2001 அன்று நிறுவப்பட்டது.இக்கோயில் தெய்வ விக்கிரகங்கள் வேப்ப மரக்கட்டைகளால் வடிக்கப்பட்டது.[1][2] இக்கோயிலின் முதன்மைத் திருவிழா இரதயாத்திரை ஆகும்.
இக்கோயில் சென்னை புது மகாபலிபுரம் சாலையில் உள்ள கானத்தூர் எனும் கிராமத்தில், அடையாற்றிக்கு தெற்கே 16 கிலோ மீட்டர் தொலைவில், வங்காள விரிகுடாவை ஒட்டி ரெட்டிக்குப்பம் சாலையில் உள்ளது.[1]