ஜெசிக்கா காக்ஸ் | |
---|---|
ஜெசிக்கா காக்ஸ் | |
பிறப்பு | ஜெசிக்கா காக்ஸ் பெப்ரவரி 2, 1983[1] சியர்ரா விஸ்டா, அரிசோனா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்[1] |
இருப்பிடம் | துஸ்கான், அரிசோனா |
மற்ற பெயர்கள் | தோதோவில், கானா: அயெர்கீ தீதி |
இனம் | பிலிபினோ அமெரிக்கர்[1] |
குடியுரிமை | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
படித்த கல்வி நிறுவனங்கள் | அரிசோனா பல்கலைக்கழகம்[1] |
பணி | உணர்ச்சிமயமான பேச்சாளர் |
செயற்பாட்டுக் காலம் | நவம்பர் 2005 முதல் |
பணியகம் | ஜெஸ்ஸிகா மோட்டிவேசனல் சர்வீசசு (Jessica Cox Motivational Services) |
அறியப்படுவது | கைகளற்ற நபர் நீரில் மூழ்குதல், விமானம் ஓட்டுதல், வாகனம் ஓட்டுதல் போன்றவற்றிற்காக[1] |
சமயம் | ரோமன் கத்தோலிக்கர்[1] |
விருதுகள் | கின்னஸ் உலக சாதனை: கால்களால் விமானம் ஓட்டிய ஒரே நபர்[1] |
வலைத்தளம் | |
www |
ஜெசிக்கா காக்ஸ் (Jessica Cox, பிறப்பு: அரிசோனாவில் 1983-ம் ஆண்டு) உலகின் முதல் கைகளற்ற விமான ஓட்டுநர், கைகளற்ற முதல் கருப்பு பட்டயம் பெற்றவர்.[2][3][4] இவர் பிறக்கும் போது இரு கைகளும் இன்றி பிறந்தார். இது பிறவிக் குறைபாடு ஆகும்.[5] மூன்று ஆண்டுகள் கடின பயிற்சிக்குப் பிறகு தன்னுடைய விமான ஓட்டுநர் உரிமத்தை அக்டோபர் 10, 2008 அன்று பெற்றார்.
இவர் இலகுரக விமானம் (10,000 அடி வரையிலும்) ஓட்டுவதில் பயிற்சியும், ஆபிள் ப்ளைட் நிறுவனத்தின் உதவித்தொகையையும் பெற்றார்.[2][5][6] தன்னுடைய பதினான்காவது அகவை வரையிலும் தன்னுடைய செயற்கைக் கையை உபயோகப்படுத்தவில்லை.[6]. தன்னுடைய கைகளுக்குப் பதிலாக, கால்களையே பெரும்பாலும் உபயோகப்படுத்தும் இவர் கார் ஓட்டுநர் உரிமமும் வைத்துள்ளார் (தடையற்ற கார் ஓட்டுநர் உரிமம்). இவருடைய கார்களில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் உபயோகப்படுத்தி வருகிறார். இவர் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்வதிலும் தேர்வு பெற்றுள்ளார். தன்னுடைய காஸ் இணைப்பது, மூக்குக் கண்ணாடியில் உள்ள குவியங்களை மாற்றுவது உள்ளிட்டவைகளைப் பிறருடைய உதவிகளை நாடாமல் தானே செய்கிறார்.[7][8] இவர் ஒரு பயிற்சிபெற்ற சுகூபா என்னும் ஒரு வகையான நீர் மூழ்குதல் வீராங்கனை ஆவார்.[7] காக்ஸ், அரிசோனா பல்கலைக்கழகத்தில் இருந்து உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது உணர்ச்சிமயமான பேச்சாளராக இருந்து வருகிறார்..[5][7]