ஜென்னி கிரீன் (Jenny Greene) (பிறப்பு: அக்தோபர் 9, 1978) ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் பிரின்சுடன் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார்.[1] இவர் தனது மீப்பொருண்மைக் கருந்துளைகளுக்கும் அவை அமைந்த பால்வெளிகளின் ஆய்வுக்கும் பெயர்பெற்றவர்.
கிரீன் 2000 இல் வானியலிலும் இயற்பியலிலும் யேல் பல்கலைக்கழகத்தில் இருந்து இளம் அறிவியல் பட்டம் பெற்றார். பிறகு இவர் வானியலில் முனைவர் பட்ட ஆய்வுக்கு ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இவரது முனைவர் பட்ட ஆய்வுரை கருந்துளைகளின் வளர்ச்சி: முற்பாழ்மை வித்துகளில் இருந்து களச் சூழலாக்கம் வரை (The Growth of Black Holes: From Primordial Seeds to Local Demographics) என்பதாகும். பிரின்சுடனில் முதுமுனைவர் ஆய்வுநல்கை பெற்றதும், ஆசுட்டினில் உள்ள யூ டியில் (UT Austin) ஓராண்டு வானியல் உதவிப் பேராசிரியராக இருந்தர். பீனர் 2011 இல் இருந்து வானியற்பியல் உதவிப் பேரசிரியராகப் பிரின்சுடனில் இருந்துவருகிறார்.
இவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் கருந்துளைகளின் பொருண்மைகளை அளத்தல், மீப்பொருண்மைக் கருந்துளைகளுக்கும் தன் பால்வெளிகளூக்கும் உள்ள உறவு, பால்வெளிக் கருக்களின் விண்மீன், வளிம இயங்கியல், பால்வெளிக் கொத்துகளின் ஒளிவிரவல் ஆகியன் அடங்கும்.[2]
இவர் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தின் சிறைக் க்ல்விபயிற்ரல் குழுவின் தலைமையேற்றுவருகிறார்.[3]
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)