ஜெப்ரி கித்திங்கான் Jeffrey Kitingan | |
---|---|
2015-இல் ஜெப்ரி கித்திங்கான் | |
மலேசிய அமைச்சர் பதவிகள் | |
1994–1995 | மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு துணை அமைச்சர் |
2020 | மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துணை அமைச்சர் |
சபா அமைச்சர் பதவிகள் | |
2018 | துணை முதலமைச்சர் |
2018 | வேளாண்மை; உணவுத் தொழில் துறை அமைச்சர் |
2020–2023 | துணை முதலமைச்சர் II |
2020–2023 | வேளாண்மை; மீன்பிடி அமைச்சர் |
2023– | துணை முதலமைச்சர் I |
2023– | வேளாண்மை; உணவுத் தொழில் துறை அமைச்சர் |
வேறு பதவிகள் | |
2018–2019 | எதிர்க்கட்சித் தலைவர் சபா மாநில சட்டமன்றம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Gapari bin Katingan @ Geoffrey Kitingan 22 அக்டோபர் 1948 கோத்தா மருடு, பிரித்தானிய வடக்கு போர்னியோ (தற்போது சபா, மலேசியா) |
அரசியல் கட்சி | ஐக்கிய சபா கட்சி (PBS) (1990–1995; 1996–2001) மக்கள் நீதி முன்னணி (AKAR) (1995–1996) சபா ஐக்கிய மக்கள் கட்சி (PBRS) (2001–2003) மக்கள் நீதிக் கட்சி (PKR) (2006–2011)[1][2][3] சரவாக் மக்கள் சீர்திருத்தக் கட்சி (STAR Sabah) (2011–2016)[4] சபா தாயக ஒற்றுமை கட்சி (STAR Sabah) (since 2016)[5] |
பிற அரசியல் தொடர்புகள் | காகாசான் ராக்யாட் (GR) (1990–1996) பாரிசான் நேசனல் (BN) (2001–2003) பாக்காத்தான் ராக்யாட் (PR) (2006–2011) ஐக்கிய சபா கூட்டணி (USA) (2016–2018) சபா ஐக்கிய கூட்டணி (GBS) (2018–2020) பெரிக்காத்தான் நேசனல் (PN) (2020–2022) சபா மக்கள் கூட்டணி (GRS) (2020 - 2022)[6] |
துணைவர்(கள்) | சிசிலியா எட்வின் கித்திங்கான் (தற்போதைய) சூசன் கித்திங்கான் (முந்தைய) |
உறவுகள் | ஜோசப் பைரின் கித்திங்கான் (சகோதரர்) மெக்சிமஸ் ஒங்கிலி (மருமகன்) ஜேம்ஸ் பீட்டர் ஒங்கிலி (மருமகன்) |
முன்னாள் கல்லூரி | ஆர்வர்டு பல்கலைக்கழகம் (MA) தப்ஸ் பல்கலைக்கழகம் (PhD) |
அறியப்படுவது | 2016-இல் சபா தாயக ஒற்றுமை கட்சி (Homeland Solidarity Party) கட்சியின் நிறுவனர் மற்றும் முதல் தலைவர் |
ஜெப்ரி கித்திங்கான் (ஆங்கிலம்; Jeffrey Kitingan; மலாய்: Datuk Seri Panglima Dr Jeffrey Gapari Kitingan) (பிறப்பு: 22 அக்டோபர் 1948) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். 2023-ஆம் ஆண்டு தொடங்கி இவர் சபா துணை முதலமைச்சர் II பதவி வகிக்கிறார்.
சனவரி 2023 இல், சபா மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் காரணமாக புங் மொக்தார் ராடின் (Bung Moktar Radin) என்பவருக்குப் பதிலாக ஜெப்ரி கித்திங்கான் சபா மாநிலத்தின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். இவர் சபா தாயக ஒற்றுமை கட்சி (Homeland Solidarity Party) கட்சியின் நிறுவனர் மற்றும் முதல் தலைவரும் ஆவார்.
சபா தாயக ஒற்றுமை கட்சி என்பது சபா மாநிலத்தின் ஆளும் சபா மக்கள் கூட்டணியின் (GRS) ஓர் உறுப்புக் கட்சி; மற்றும் பெரிக்காத்தான் நேசனல் (PN) கூட்டணியின் முன்னாள் உறுப்புக் கட்சி ஆகும்.[7]
ஜெப்ரி கித்திங்கான், கோத்தா மருடு நகரில் பிறந்தார். ஆனாலும் இவர் தம்புனான் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத் துறையில் முதுகலை பட்டம் பெற்று, பின்னர் 1984-ஆம் ஆண்டில் தப்ஸ் பல்கலைக்கழகத்தில் (Tufts University) முனைவர் பட்டம் பெற்றார்.[8][9]
இவரின் சகோதரர் ஜோசப் பைரின் கித்திங்கான் 1985 முதல் 1994 வரை |சபாவின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
இவர் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக அறியப்படுகிறார். சபா மாநிலத்தை மலேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் பாரிசான் நேசனல் கட்டுப்பாட்டில் இருந்த மலேசிய மத்திய அரசாங்கத்தால், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டார். இருப்பினும் இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அவரின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.[10] இவர் பலமுறை அரசியல் கட்சி மாறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1990-இல், அவர் தன் சகோதரர் ஜோசப் பைரின் கித்திங்கான் தலைமை தாங்கிய ஐக்கிய சபா கட்சியின் மூலமாக (PBS) தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
இருப்பினும், 1994-ஆம் ஆண்டு சபா மாநிலத் தேர்தலுக்குப் பிறகு, அவர் தன் சகோதரரையும் ஐக்கிய சபா கட்சியையும் கைவிட்டு மக்கள் நீதி முன்னணி (AKAR) கட்சியில் சேர்ந்தார். இதுவே சபா மாநிலத்தில் ஐக்கிய சபா கட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அவர் புதிதாகச் சேர்ந்த மக்கள் நீதி முன்னணி கட்சியின் உயர்ப் பதவிக்கு வர முயற்சிகள் செய்தார். ஆனால் தோல்வியடைந்தார். மீண்டும் ஐக்கிய சபா கட்சியில் இணைந்தார்.
இருப்பினும், 2000-ஆம் ஆண்டில், அவர் மீண்டும் ஐக்கிய சபா கட்சியில் இருந்து விலகி, சபா ஐக்கிய மக்கள் கட்சியில் (Parti Bersatu Rakyat Sabah) (PBRS) சேர்ந்தார். சபா ஐக்கிய மக்கள் கட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால் மீண்டும் தோல்வியடைந்தார்.[11] பின்னர் அவர் 2002-இல் சபா ஐக்கிய மக்கள் கட்சியில் (PBRS) இருந்து வெளியேறி ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பில் (UPKO) சேர முயன்றார்.
இருப்பினும், அவர் ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பில் (UPKO) இருந்து தன் உறுப்பினர் விண்ணப்பத்தை விரைவாக மீட்டுக் கொண்டார். மூன்றாவது முறையாக மீண்டும் ஐக்கிய சபா கட்சியில் (PBS) சேர முயன்றார். ஆனால் ஐக்கிய சபா கட்சி அவரை மீண்டும் கட்சிக்குள் வரவேற்கவில்லை.
2003-இல், அவர் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பான அம்னோவில் (UMNO) சேர இருமுறை விண்ணப்பித்தார். முதல்முறை கோலாலம்பூரில் உள்ள அம்னோ தலைமையகம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
பின்னர் அவர் தன் சட்டமுறைப் பெயரான "கபாரி பின் கித்திங்கான் @ ஜெப்ரி கித்திங்கான்" (Gapari bin Kitingan @ Geoffrey Kitingan) எனும் பெயரைப் பயன்படுத்தி, சபா கெனிங்காவ் அம்னோ கிளையின் மூலமாக விண்ணப்பித்தார். அவரின் விண்ணப்பம் தவறுதலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருப்பினும், அம்னோ உயர்மட்டக் குழுவினர் தங்களின் தவற்றை உணர்ந்தவுடன், அவர்கள் உடனடியாக ஜெப்ரி கித்திங்கானின் உறுப்பினர்த் தகுதிக்குத் தடை விதித்தனர்.[11][12][13]
2006-இல் மக்கள் நீதிக் கட்சியில் (PKR) ஏற்றுக்கொள்ளப்படும் வரை அவர் எந்த ஒரு கட்சியையும்; எந்த ஒரு கூட்டணியையும் சாராதவராக இருந்தார். மக்கள் நீதிக் கட்சியில் சேர்ந்த பிறகு அங்கு அவர் அந்தக் கட்சியின் துணைத் தலைவரானார்.[1] 2009-இல் அவர் தன் துணைத் தலைவர் பதவியைத் துறப்பு செய்தார். ஆனாலும் மக்கள் நீதிக் கட்சியில் உறுப்பினராகவே இருந்தார்.[2] அவர் இறுதியாக சனவரி 2011-இல் மக்கள் நீதிக் கட்சியில் இருந்து விலகினார்.[3]
திசம்பர் 2010-இல், ஐக்கிய போர்னியோ கூட்டணி (United Borneo Alliance) என்ற பெயரில் ஓர் அரசு சாரா நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனம், மலேசிய 20-அம்ச உடன்படிக்கை (20-point Agreement) மற்றும் மலேசிய ஒப்பந்தம் (Malaysia Agreement) ஆகியவற்றின் அடிப்படை நோக்கத்தில் சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் உரிமைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது.[14]
2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், கெனிங்காவ் மக்களவைத் தொகுதியில் தன் சகோதரர் ஜோசப் பைரின் கித்திங்கான் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார்.
ஜெப்ரி கித்திங்கான், மலேசிய அரசியல் வட்டாரத்தில் ஓர் அரசியல் "தவளை" என அழைக்கப்படுவது உண்டு. அவருடைய அரசியல் வாழ்க்கை முழுவதும் அவரின் தன் விருப்பத்திற்காக கட்சித் தாவல் மேற்கொண்டதால் அவ்வாறு அறியப்படுகிறார்.[15] அதற்கு அவர், சபா அரசியலில் கட்சித் தாவல் என்பது பொதுவான நடைமுறையாகும் என்றார்.[16]
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
ஜெப்ரி கித்திங்கான் (Gapari Katingan @ Geoffrey Kitingan) | சபா மக்கள் கூட்டணி (GRS) | 23,155 | 42.20 | 42.20 | |
கிரேலியா கில்லோட் (Grelydia Gillod) | பாக்காத்தான் (PH) | 15,099 | 27.52 | 27.52 | |
ரசினின் கூடிஸ் (Jake Nointin) | மக்களாட்சி கட்சி (KDM) | 9,598 | 17.49 | 17.49 | |
மார்க்கோஸ் சித்தோன் (Rasinin Koutis) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 7,020 | 12.79 | 18.95 ▼ | |
மொத்தம் | 54,872 | 100.00 | – | ||
மூலம்: [17] |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)CS1 maint: unrecognized language (link)