ஜெமினி | |
---|---|
இயக்கம் | சரண் |
தயாரிப்பு | எம். சரவணன் எம். பாலசுப்ரமணியன் எம். எஸ். குகன் பி. குருநாத் |
கதை | கிருஷ்ண முரளி (வசனம்) |
மூலக்கதை | ஜெமினி |
திரைக்கதை | சரண் |
இசை | ஆர். பி. பட்நாயக் |
நடிப்பு | வெங்கடேஷ் நமிதா கபூர் (நடிகை) |
ஒளிப்பதிவு | ஏ. வெங்கடேஷ் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | ஏவிஎம் சுரேஷ் புரொடொக்சன்ஸ் (வழங்கும்) |
விநியோகம் | சுரேஷ் புரொடொக்சன்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 11, 2002 |
ஓட்டம் | 132 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஜெமினி (Gemini) 2002 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தெலுங்கு- மொழி அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை சரண்இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை எம். சரவணனால் ஏவிஎம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் வெங்கடேஷ் மற்றும் நமிதா கபூர் (நடிகை) முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர். பி. பட்நாயக் இசையமைத்துள்ளார். இது ஜெமினி தமிழ் திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும். தமிழ் திரைப்படம் வெளியான அதே ஆண்டில் இத்திரைப்படமும் வெளியானது.[1][2]
இத்திரைப்படத்தின் கதையானது விசயவாடாவில் வசிக்கும் ஜெமினி(வெங்கடேஷ்) மற்றும் லட்டா(கலாபவன் மணி) ஆகிய இரண்டு சமகால இரவுடிகளைச் சுற்றிச் சுழல்கிறது. ஜெமினியின் நண்பன் லட்டாவின் நண்பனால் கொல்லப்படுகிறார். அதன் பிறகு ஜெமினியும் அவனது குழுவினரும் இணைந்து தங்கள் நண்பனைக் கொன்றவனைத் தேடிப்பிடித்து கொலை செய்கின்றனர். இந்த சம்பவம் இருவருக்குமிடையேயான பகையின் தொடக்கமாக மாறுகிறது.
இதற்கிடையில், ஜெமினி மனீசா நட்வர்லாலைச் (நமிதா) சந்தித்து காதலில் விழுகிறார். அவளுடைய அன்பைப் பெறுவதற்காக ஜெமினி அவளின் வகுப்புத் தோழனாகும் பொருட்டு ஒரு மாலை நேரக் கல்லூரியில் சேர்கிறார். உண்மையில் அளளும் கூட ஜெமினியுடன் காதலில் விழுகிறாள்.
ஜெமினி மற்றும் லட்டா ஒரு சந்தை பேரத்தில் எதிரெதிர் சந்திக்கின்றனர். ஜெமினி தனது புத்திசாலித்தனமான தந்திரங்களால் லட்டாவைத் தோற்கடிக்கிறார். இதிலிருந்து ஜெமினியின் மீதான கவர்ச்சி அதிகரிக்கிறது. இதற்கிடையில், விஜயவாடாவிற்கு புதிய காவல் துறை ஆணையராக நரேந்திர சௌத்ரி (முரளி (மலையாள நடிகர்)) பதவியேற்கிறார். அவர் ஜெமினி மற்றும் லட்டா இருவரையும் கைது செய்கிறார். அவர்களுக்கிடையே உள்ள பகையைப் புரிந்து கொண்டு இருவரும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு சாகட்டும் என்றும் அதன் மூலம் இரவுடி கலாச்சாரம் ஒழியட்டும் என்ற நோக்கத்தோடு இருவரையும் தனியான ஒரே அறையில் அடைக்கிறார். ஆனால், மாறாக, ஜெமினி லட்டாவை சம்மதிக்கச் செய்து நரேந்திர சௌத்ரியிடம் தாங்கள் திருந்தி இயல்பாக வாழ ஒரு வாய்ப்பளிக்குமாறு வேண்டுகின்றனர். ஜெமினியின் இந்த யோசனையானது வெற்றிபெற்று இருவருக்கும் திருந்தி வாழ ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஜெமினி தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறார். ஆனால், லட்டா தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் ஜெமினியைத் தொடர்ந்து வம்புக்கிழுக்கிறார். தனது தொழிலுக்கு ஜெமினி உதவி செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறார்.ஆனால், ஜெமினி மாறாக லட்டாவின் நடவடிக்கைகள் குறித்து நரேந்திர சௌத்ரிக்கு தெரிவிக்கிறார். இதன் காரணமாக லட்டா கைது செய்யப்படுகிறார். இதற்கிடையில், ஜெமினி மனீஷாவுடன் இணைய முயற்சிக்கிறார். மனீஷாவும் அவரது மாற்றத்தைக் கண்டு ஜெமினியை மன்னிக்கிறார்.
சில மாதங்களுக்குப் பிறகு, சௌத்ரி ஆந்திரப் பிரதேசத்தின் காவல்துறை இயக்குநராக பதவி உயர்வு பெற்று மாறுதலில் சென்று விட புதிய காவல் துறை ஆணையராக குமாரசாமி, (கோட்டா சீனிவாச ராவ்) பணியில் சேருகிறார். ஆனால், ஜெமினியின் கெட்ட நேரத்திற்கு குமாரசாமி ஊழல் பேர்வழியாக இருக்கிறார். அவர் லட்டாவை சிறயைில் இருந்து விடுவிக்கிறார். இப்போது லட்டாவும், காவல்துறை ஆணையரும் அவரை இரவுடித் தொழிலில் மீண்டும் இறங்க ஜெமினியை நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால், ஜெமினி, அவர் இன்னும் அவர்களிடமிருந்து விலகி விடவே விரும்புகிறார்.
ஜெமினியைத் தொடர்ந்து வற்புறுத்தும் விதமாக ஜெமினியின் வலது கரமாக விளங்கும் நண்பனை லட்டா கொலை செய்கிறார். பிறகு, இறுதிக்கட்டத்தில் ஜெமினி ஒரு தந்திரம் செய்து குமாரசாமியை லட்டாவைக் கொல்வதற்காகப் பயன்படுத்துகிறார். குமாரசாமி போக்குவரத்துக் காவல் துறை இயக்குநராக மாற்றப்படுகிறார். விஸ்வநாத் புதிய காவல்துறை ஆணையராகப் பதவியேற்கிறார். மனீஷாவுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்.