ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் | |
---|---|
இயக்கம் | ஓடம் இளவரசு |
தயாரிப்பு | டி. சிவா |
இசை | டி. இமான் |
நடிப்பு | அதர்வா சூரி ரெஜினா கசான்ட்ரா பிரணிதா ஐஸ்வர்யா ராஜேஷ் அதிதி போங்க்கர் |
ஒளிப்பதிவு | ஸ்ரீ சரவணன் |
படத்தொகுப்பு | பிரவீன் கே. எல் |
கலையகம் | அம்மா கிரியேசன்ஸ் |
வெளியீடு | சூலை 14, 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | 99.99 கோடி |
ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் (Gemini Ganeshanum Suruli Raajanum) 2017 இல் வெளிவந்த தமிழ் மொழியில் வெளிவந்த காதல் திரைப்படம். இதனை இயக்கியவர் ஓடம் இளவரசு, தயாரிப்பு டி.சிவா. இந்தப் படத்தில் அதர்வா மற்றும் சூரி படத்தின் தலைப்பில் உள்ள பெயரில் நடித்திருந்தனர். இவர்களுடன் ரெஜினா கசான்ட்ரா பிரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அதிதி போங்கர் ஆகியோரும் நடித்திருந்தனர். தனது திருமண அழைப்பிதழை தனது கல்லூரி காலத்துப் பெண் தோழிக்கு தருவதிலிருந்து கதை ஆரம்பமாகிறது. 2017 ஜுலை 14 அன்று வெளியானது.
2015 வாக்கில் கலையரசன் மற்றும் சூரி ஆகிய இருவரும் முன்னணி வேடங்களில் நடிக்க ஓடம் இளவரசுவை இயக்குனராக அறிமுகப்படுத்துவதாக தயாரிப்பாளர் டி. சிவா ஒப்பந்தம் செய்து கொண்டார்[1] ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற பெயருடன் நான்கு நடிகைகளைக் கொண்டு அதிரடி மற்றும் நகைச்சுவைப் படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவித்தார். ஆயினும், இதன் படப்பிடிப்பு காலவரையற்று தள்ளிப் போயிற்று. பின்னர் கிடப்பில் போடப்பட்டது[2]
பின்னர் 2016 சூன் வாக்கில் அதர்வா முக்கியப் பாத்திரத்திலும் இவருடன் ரெஜினா நடிப்பதாகவும் முடிவு செய்து சூன் மாதத்தின் இறுதியில் மதுரையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது.[3][4] பின்னர் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பிரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும்ஆனந்தி ஆகியோர் இணைந்து நடிக்க செப்டம்பரில் ஊட்டியில்தொடங்கியது.[5] நடிகை ஐஸ்வர்யாவின் வேடத்திற்கு முதலில் பிரணிதாவை நடிக்க வைக்கத் திட்டமிட்ட இயக்குநர் பின்னர், மனதை மாற்றிக்கொன்டார்[6] ஊட்டியில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய படக்குழு 2016 டிசம்பரில் வெளியிடுவதாக அறிவித்தது.[7] ஆனந்தி மற்ற நடிகைகளைப் போல படத்தில் தனது கதாபாத்திரம் முக்கியமில்லாத காரணத்தால் படத்திலிருந்து விலகினார். பின்னர் அவருக்கு பதிலாக இந்தி நடிகை அதிதி போங்கர் அந்த வேடத்தில் நடித்தார்.[8][9]
டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஐந்து பாடல்களைக் கொண்ட இதன் இசை 2017 சூன் 23 அன்று வெளியிடப்பட்டது.
பாடல் வரிசை | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடல்கள் | நீளம் | |||||||
1. | "அம்முக்குட்டியே" | பிரதீப் குமார். | 4:20 | |||||||
2. | "கண்மணி" | அபய் ஜோஜத்புர்கர் | 4:45 | |||||||
3. | "வெண்ணிலா தங்கச்சி" | நாகாஷ் ஆசிஸ், ரம்யா என்.எஸ்.கே. | 4:18 | |||||||
4. | "ஆகா ஆகா" | ஹரிசரண், சிரேயா கோசல் | 4:15 | |||||||
5. | "தம்பி கட்டிங் கு" | அந்தோணிதாசன், விஜய் யேசுதாஸ் | 4:39 |
பண்டிகை, ரூபாய் மற்றும் திரி போன்ற படங்கள் வெளிவந்த 2017 ஜுலை 14 அன்று வெளிவந்து, கலவையான விமர்சனத்தைப் பெற்றது.தி இந்து நாளிதழ் தனது விமர்சனத்தில் "காதலும் நகைச்சுவையும் சிரிப்பை வரவழைக்கத் தவறிவிட்டது " என எழுதியது.[10]