ஜெய பிரகாஷ் ரெட்டி | |
---|---|
பிறப்பு | [1] சிர்வேலா, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா[2] (தற்போதைய சிரவேலா ஆந்திரப் பிரதேசம், இந்தியா) | 8 மே 1946
இறப்பு | 8 செப்டம்பர் 2020 குண்டூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா | (அகவை 74)
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1976—2020 |
ஜெயப்பிரகாஷ் ரெட்டி (Jaya Prakash Reddy) (8 மே 1946-8 செப்டம்பர் 2020) தெலுங்குத் திரைப்படங்களில் தோன்றிய ஓர் இந்திய நடிகராவார்.[3][4] ஆந்திராவின் சிர்வேல் என்ற இடத்தில் பிறந்த இவர், சமரசிம்ஹா ரெட்டி (1999) என்ற திரைப்படத்தில் ‘வீர ராகவ ரெட்டி’ என்ற கதாபாத்திரம் மூலம் அறிமுகமானார். ஜெயம் மனதேரா (2000), சென்னகேசவ ரெட்டி (2002) போன்ற பல படங்களில் வில்லனாக நடித்தார். இவரது தொழில் வாழ்க்கையின் பிற்பகுதியில், இவர் பல நகைச்சுவை வேடங்களிலும் நடித்திருந்தார்.[5] இவர் 8 செப்டம்பர் 2020 அன்று குண்டூரில் உள்ள தனது வீட்டில் இதய செயலிழப்பு காரணமாக தனது 74வது வயதில் காலமானார்.[6] நந்தி விருது உட்பட பல விருதுகள இபெற்றுள்ளார். தெலுங்குத் திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய செய்த பங்களிப்பிற்காக 16வது சந்தோசம் விருது வழங்கும் விழாவில் சிறப்பு நடுவர் விருது (அலெக்சாண்டர்) வழங்கப்பட்டது.[7]
இவர் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் தோன்றியுள்ளார்.
வருடம் | படத் தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2003 | ஆஞ்சநேயா | ஜெயபிரகாஷ் | |
2003 | திவான் | கந்தவேல் | |
2005 | ஆறு | ரெட்டி (நாதனின் எதிரி) | |
2005 | சின்னா | சின்னாவின் முன்னாள் முதலாளி | |
2006 | தர்மபுரி | எம்.எல்.ஏ. கொண்ட மூக்கன் | |
2010 | உத்தம புத்திரன் | சின்னமுத்து கவுண்டர் | தமிழ் வெளியீட்டில் தானே குரல் அளித்துள்ளார். |