ஜெயசிறீ நைஷாத் ராய்ஜி (Jayashri Raiji)(1895-1985) என்பவர் இந்திய விடுதலை ஆர்வலர், சமூக சேவகர், சீர்திருத்தவாதி மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதியின் முதலாவது மக்களவை உறுப்பினராக இருந்தார்.
ஜெயசிறீ 1895ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி சூரத்தில் சர் மனுபாய் மேத்தாவிற்கு மகளாகப் பிறந்தார். மேலும் இவர் தனது உயர் படிப்பினை பரோடா கல்லூரியில் பயின்றார்.[1]
தனது சமூகப் பணிக்காக அறியப்பட்ட ராய்ஜி 1919-ல் பாம்பே மாகாண மகளிர் குழுவின் தலைவரானார். ஒத்துழையாமை இயக்கத்தின் போது (1930), ஜெயசிறீ வெளிநாட்டுப் பொருட்களை விற்கும் கடைகளை முற்றுகையிட்ட போராட்டத்தில் கலந்து கொண்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது (1942) பிரித்தானிய அதிகாரிகளால் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சுதேசி பொருட்களைத் தத்தெடுப்பதை ஊக்குவிப்பதற்காக, கண்காட்சிகளை நடத்தவும், பெண்கள் கூட்டுறவு அங்காடிகளை அமைக்கவும் இவர் உதவினார்.[1]
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, முதல் பொதுத் தேர்தலில் தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஜெயசிறீ முதலாவது மக்களவை உறுப்பினரானார்.[2] இந்தியக் குழந்தைகள் நலக் குழுவின் நிறுவன உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[3] 1980ஆம் ஆண்டில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாடு மற்றும் நலனுக்கான ஜம்னாலால் பஜாஜ் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[4]
ஜெயசிறீ 1918-ல் என். எம். ரைஜியை மணந்தார். இந்த இணையருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.[1] இவர் 1985-ல் இறந்தார்.[5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)