Jayanta Hazarika | |
---|---|
Jayanta Hazarika (Rana) | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | Jayanta Hazarika (Rana) |
பிறப்பு | மங்கல்தோய், அசாம் மாகாணம், British India | 20 செப்டம்பர் 1943
பிறப்பிடம் | அசாம் |
இறப்பு | 15 அக்டோபர் 1977 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 34)
தொழில்கள் | Singer, songwriter, composer, music director, |
இசைத்துறையில் | 1960s to 1977 |
ஜெயந்தா அசாரிகா (Jayanta Hazarika) (20 செப்டம்பர் 1943 - 15 அக்டோபர் 1977) அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியப் பாடகரும்,அசாமிய இசையமைப்பாளரும் ஆவார். இவர் ஒரு சில பாடல்களுக்கு வரிகளையும் எழுதியுள்ளார். மேலும், பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் பூபேன் அசாரிகாவின் இளைய சகோதரர் ஆவார்.
ராணா-டா என்று பிரபலமாக அறியப்படும் ஜெயந்தா அசாரிகா, மறைந்த டாக்டர் பூபேன் அசாரிகாவின் இளைய சகோதரர் ஆவார். இவர் தனது சகோதரருடன் இணைந்து தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் தனியாக பாடகர் மற்றும் இசையமைப்பாளரானார். ராக் அண்டு ரோல், ஜாஸ் மற்றும் மேல்நாட்டுச் செந்நெறி இசை போன்ற மேற்கத்திய இசை வடிவங்களை பாரம்பரிய அசாமிய மெல்லிசைகளுடன் இணைத்து புதிய ஒலியை உருவாக்கிய முதல் அசாமிய இசையமைப்பாளரானார். மேலும் தனது இசையமைப்பில் பல மேற்கத்திய கருவிகளை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகவும் இருந்தார்.
1977ஆம் ஆண்டு ‘நாதுன் ஆஷா’ என்ற திரைப்படத்தின் இசைப் பதிவுக்காக கொகல்கத்தா சென்ற இவர் திடீரென நோய்வாய்ப்பட்டு அக்டோபர் 15 அன்று இறந்தார் [1]
ஜெயந்த ஹசாரிகா பல இசைக்கருவிகளை வாசிப்பதில் அனுபவம் வாய்ந்தவர். கித்தார், டோம்ரா, மாண்டலின், துருத்தி, தபலா மற்றும் ஆர்மோனிகா ஆகியவற்றை வாசித்தார். உலகின் பிற பகுதிகளில் இருந்து பல்வேறு பாரம்பரிய இசைக்கருவிகளை சேகரித்து வந்தார். ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு நிலைகளில் ஆர்மோனியத்தை வாசிப்பார். [2]
மேற்கத்திய இசைக்கருவிகளுடன் பாரம்பரிய அசாமிய தாளங்களின் அதிநவீன கலவையுடன் இசையை உருவாக்கினார். மேற்கத்திய இசைகளில் இவரது திறமையான இணைவு இவரது இசைக்கு அதுவரை நவீன அசாமிய பாடல்களுடன் தொடர்பில்லாத தனித்துவத்தை அளித்தது. இவர் வழக்கத்திற்கு மாறான முன்னிசைகளையும் இடையிசைகளையும் பயன்படுத்தினார். [3] நிர்மல்பிரபா போர்தோலோவின் பாடல் வரிகளும், இவரது இசையமைப்பின் கலவையும் சேர்ந்து எப்பொழுதும் அசாமின் மெல்லிசைகளாக கருதப்படுகிறது. இந்த இணை உருவாக்கிய பெரும்பாலான பாடல்கள் இன்றும் பிரபலமாக உள்ளன.