ஜெயந்த் ராஜாராம் பாட்டீல் (Jayant Patil) (பிப்ரவரி 16, 1962) ஒரு மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். இவர் தேசியவாத காங்கிரசு கட்சியின் மகாராட்டிர மாநிலத் தலைவராகவும், இசுலாம்பூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
ஜெயந்த் பாட்டீல் சாங்லி மாவட்டத்தில் தேசியவாத காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஆவார், அவர் தற்போது அக்கட்சியின் மாநிலத் தலைவராகவும், மகாராட்டிரா சட்டமன்றத்தில் அக்கட்சியின் குழுத் தலைவராகவும் உள்ளார். ஜெயந்த் பாட்டீல் சரத் பவாரின் மிகவும் விசுவாசமான சக ஊழியராகக் கருதப்படுகிறார். விலாஸ்ராவ் தேஷ்முக்கின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் ஆவார்.[1] அதிக முறை மாநில நிதி அறிக்கையைத் தாக்கல் செய்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். பிரித்விராஜ் சவானின் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சிக்கான அமைச்சராக இருந்தவர். 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, அப்போதைய உள்துறை அமைச்சர் ஆர். ஆர். பாட்டீல், அதன் பிறகு, முதல்வர் அசோக் சவானின் அமைச்சரவையில் மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெயந்த் பாட்டீல், சாங்லி மாவட்டத்தில் பல கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தினார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் இசுலாம்பூர் சட்டமன்றத் தொகுதியை சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.[2] [3]இவரது தந்தை ராஜாராம்பாபு பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார்.