ஜெயப்பிரகாஷ் நாராயண் | |
---|---|
![]() | |
தலைவர், லோக் சட்டா கட்சி | |
ஆந்திர சட்டசபை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2009 | |
தொகுதி | குகாட்பள்ளி, ஐதராபாத்து, இந்தியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 சனவரி 1956 நாக்பித், மகாராட்டிரம் |
இணையத்தளம் | www.kukatpallynow.com |
'நாகபைரவ ஜெயப்பிரகாஷ் நாராயணன் (Nagabhairava Jayaprakash Narayan) (பிறப்பு: 14 ஜனவரி 1956) ஜேபி (JP) என்றும் அறியப்படும் இவர் ஒர் இந்திய அரசியல்வாதியும், அரசியல் சீர்திருத்தவாதியும் மற்றும் பத்திரிக்கையாளரும் ஆவார். லோக் சட்டா என்கிற கட்சியை உருவாக்கியவரும் அதன் ராகவும் இருந்தார்.[1]. மேலும், இவர் முன்னாள் இந்திய ஆட்சிப்பணியாளரும் ஆவார். தேர்தல் சீர்திருத்தங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பிற்காகவும் மிகவும் அறியப்படுகிறார். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி எகனாமிக் டைம்ஸ், தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ், தி இந்துமற்றும் ஈநாடு போன்ற பல பத்திரிக்கைகளிலும் இவர் பத்திகளை எழுதி வருகிறார்.