ஜெராண்டுட் (P081) மலேசிய மக்களவைத் தொகுதி பகாங் | |
---|---|
Jerantut (P081) Federal Constituency in Pahang | |
ஜெராண்டுட் மக்களவைத் தொகுதி (P081 Jerantut) | |
மாவட்டம் | ஜெராண்டுட் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 87,051 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | ஜெராண்டுட் தொகுதி |
முக்கிய நகரங்கள் | ஜெராண்டுட், தாமான் நெகாரா, குனோங் தகான், பெனும் மலை |
பரப்பளவு | 7,273 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | கைரில் நிசாம் கிருதீன் (Khairil Nizam Khirudin) |
மக்கள் தொகை | 104,771 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
ஜெராண்டுட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Jerantut; ஆங்கிலம்: Jerantut Federal Constituency; சீனம்: 而连突国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், ஜெராண்டுட் மாவட்டத்தில் (Jerantut District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P081) ஆகும்.[6]
ஜெராண்டுட் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து ஜெராண்டுட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]
ஜெராண்டுட் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் ஜெராண்டுட். ஜெராண்டுட் மாவட்டம் பகாங் மாநிலத்தின் மிகப் பெரிய மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் வட எல்லையில் கிளாந்தான், திராங்கானு மாநிலங்கள் உள்ளன. தெற்கே தெமர்லோ மாவட்டம், மாரான் மாவட்டம்; மேற்கே லிப்பிஸ் மாவட்டம், ரவுப் மாவட்டம்; கிழக்கே குவாந்தான் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. ஜெராண்டுட் மாவட்டத்தில் தெம்பிலிங் ஆறு ஓடுகிறது.
ஜெராண்டுட் மாவட்டத்தின் பழைய பெயர் சிம்பாங் அம்பாட். பிரித்தானியர்களின் ஆட்சி காலத்தில் ஜெராண்டுட் நகரத்திற்கு சங்சன் 4 (Junction 4) என்று பெயர் வைத்தார்கள். பகாங் ஆற்றின் ஜெராண்டுட் பகுதியில் நீர் பெருக்கம் ஏற்படுவது உண்டு.
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களாக லதா மெராவுங் நீர்வீழ்ச்சி (Lata Meraung Waterfall), மலேசியப் பழங்குடியினர் குடியிருப்புகள், குனோங் தகான், குனோங் பெனோம், ராபிள்சியா பாதுகாப்பு மையம் (ஆங்கிலம்: Rafflesia Conservation Center) போன்றவை அமைகின்றன.
பகாங் மாநிலத்தின் பெரிய மாவட்டமான ஜெராண்டுட், அண்மைய காலங்களில் மிகத் துரிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. ஜெராண்டுட் மாவட்டம் 10 துணை மாவட்டங்களைக் கொண்டது. இந்த மாவட்டத்தில் 125 கிராமங்கள் உள்ளன.
ஜெராண்டுட் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் ஜெராண்டுட் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P066 | 1974–1978 | சரீப் அகமது (Shariff Ahmad) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | ||||
6-ஆவது மக்களவை | 1982–1986 | வான் அபு பக்கர் வான் முகமது (Wan Abu Bakar Wan Mohamed) | ||
7-ஆவது மக்களவை | P074 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P077 | 1995–1999 | அகமது கமாருல்சமான் முகமது பரியா (Ahmad Kamaruzaman Mohamed Baria) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | தெங்கு அசுலான் சுல்தான் அபு பக்கர் (Tengku Azlan Sultan Abu Bakar) | ||
11-ஆவது மக்களவை | P081 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | அகமது நசுலான் இட்ரிசு (Ahmad Nazlan Idris) | ||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | கைரில் நிசாம் கிருதீன் (Khairil Nizam Khirudin) |
பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
பெரிக்காத்தான் நேசனல் | கைரில் நிசாம் கிருதீன் (Khairil Nizam Khirudin) |
31,701 | 47.49% | 47.49% | |
பாரிசான் நேசனல் | முகமது சுகார்மி அபு பக்கர் (Mohd Zukarmi Abu Bakar) |
23,609 | 35.37% | 9.69% ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | அசன் பசுரி அவாங் மாட் தகான் (Hassan Basri Awang Mat Dahan) |
11,444 | 17.14% | 4.50% ▼ | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 66,754 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 838 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 182 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 67,744 | 76.68% | 4.15% ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 87,051 | ||||
பெரும்பான்மை (Majority) | 8,092 | 12.12% | 0.36% | ||
பெரிக்காத்தான் நேசனல் | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)