ஜெராய் (P012) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Jerai (P012) Federal Constituency in Kedah | |
![]() கெடா மாநிலத்தில் ஜெராய் மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | பெண்டாங் மாவட்டம்; கெடா |
வாக்காளர் தொகுதி | ஜெராய் தொகுதி |
முக்கிய நகரங்கள் | யான்; கோலா மூடா |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | ![]() |
மக்களவை உறுப்பினர் | சப்ரி அசீட் (Sabri Azit) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 105,001[1][2] |
தொகுதி பரப்பளவு | 458 ச.கி.மீ[3] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
ஜெராய் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Jerai; ஆங்கிலம்: Jerai Federal Constituency; சீனம்: 日赖联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், யான் மாவட்டம் (Yan District); கோலா மூடா மாவட்டம் (Kuala Muda District) ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P011) ஆகும்.[4]
ஜெராய் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1958-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் இந்தத் தொகுதி நீக்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு மீண்டும் அதே பெயரில் புதிய ஒரு தொகுதியாக உருவாக்கப்பட்டது.
2003-ஆம் ஆண்டில் இருந்து ஜெராய் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 1969 - 1971-ஆம் ஆண்டுகளில் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் நடைபெறவில்லை.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), ஜெராய் தொகுதி 53 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[5]
யான் மாவட்டத்தின் (Yan District) வடக்கே கோத்தா ஸ்டார் மாவட்டம் Kota Setar District, வடகிழக்கில் பெண்டாங் மாவட்டம் Pendang District மற்றும் தெற்கே கோலா மூடா மாவட்டம் Kuala Muda District ஆகிய மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன.
யான் மாவட்டம் மலாக்கா நீரிணையின் கடற்கரைப் பகுதியில் உள்ளது. இது கெடாவின் மிகச் சிறிய மாவட்டம் ஆகும். "யான் பெசார்" என்பது யான் மாவட்டத்தின் நிர்வாக நகரமாகும்.
இந்த மாவட்டம் கெடா, பினாங்கு மாநிலங்களின் எல்லைக்கு அருகாமையில் உள்ளது. தீக்காம் பத்து, பாடாங் தெம்புசு, சுங்கை லாலாங், பீடோங், புக்கிட் செலம்பாவ், சீடாம், குரூண், செமெலிங், மெர்போக், கோத்தா கோலா மூடா, தஞ்சோங் டாவாய் ஆகியவை கோலா மூடா மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் ஆகும்.
கோலா மூடா மாவட்டம், கெடா மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாவட்டம் ஆகும். மலேசியாவில் புரதான நாகரிகங்கள் தோன்றிய இடமாகவும் இந்த இடம் கருதப் படுகிறது.[6]
2004-ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரலைகளின் தாக்குதல்களினால் கோலா மூடா மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப் பட்டன.
ஜெராய் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1959 - 2023) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
கெடா தெங்கா தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
மலாயா கூட்டமைப்பு நாடாளுமன்றம் | |||
1-ஆவது | 1959–1963 | முகமது இசுமாயில் யூசோப் (Mohamed Ismail Mohd Yusof) |
கூட்டணி (அம்னோ) |
மலேசிய நாடாளுமன்றம் | |||
1-ஆவது | 1963–1964 | முகமது இசுமாயில் யூசோப் (Mohamed Ismail Mohd Yusof) |
கூட்டணி (அம்னோ) |
2-ஆவது | 1964–1969 | அனாபியா உசேன் (Hanafiah Hussain) | |
1969–1971 | நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது[7][8] | ||
3-ஆவது | 1971–1973 | அனாபியா உசேன் (Hanafiah Hussain) |
Perikatan (UMNO) |
1973–1974 | பாரிசான் (அம்னோ) | ||
4-ஆவது | 1974–1978 | சனுசி ஜுனிட் (Sanusi Junid) | |
5-ஆவது | 1978–1982 | இசுமாயில் அர்சாட் (Ismail Arshad) | |
6-ஆவது | 1982–1986 | ||
7-ஆவது | 1986–1990 | கசாலி அகமது (Ghazali Ahmad) | |
8-ஆவது | 1990–1992 | ||
1992–1995 | பட்ருடின் அமிருல்டின் (Badruddin Amiruldin) | ||
யான் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது | |||
ஜெராய் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது | |||
11-ஆவது | 2004–2008 | பட்ருடின் அமிருல்டின் (Badruddin Amiruldin) |
பாரிசான் (அம்னோ) |
12-ஆவது | 2008–2013 | பிராடுஸ் ஜபார் (Mohd Firdaus Jaafar) |
பாஸ் |
13-ஆவது | 2013–2018 | ஜாமில் கிர் பகரோம் (Jamil Khir Baharom) |
பாரிசான் (அம்னோ) |
14-ஆவது | 2018–2020 | சப்ரி அசீட் (Sabri Azit) |
பாஸ் |
2020–2022 | பெரிக்காத்தான் (பாஸ்) | ||
15-ஆவது | 2022 – தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
105,001 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
83,294 | 78.37% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
82,293 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
164 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
837 | - |
பெரும்பான்மை (Majority) |
33,192 | 40.33% |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% | |
---|---|---|---|---|---|
சப்ரி அசீட் (Sabri Azit) |
பெரிக்காத்தான் | 49,461 | 60.10% | +60.10 ![]() | |
சமீல் கிர் பகரோம் (Jamil Khir Baharom) |
பாரிசான் | 16,269 | 19.77% | -13.35 ▼ | |
சுல்அசுமி சாரிப் (Zulhazmi Shariff) |
பாக்காத்தான் | 15,590 | 18.94% | -14.00 ▼ | |
நிசாம் மாசார் (Mohd Nizam Mahsyar) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 973 | 1.18% | +1.18 ![]() |
எண். | தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N20 | சுங்கை லீமாவ் (Sungai Limau) |
முகமது அசாம் சமாட் (Mohd Azam Abd Samat) |
பெரிக்காத்தான் (பாஸ்) |
N21 | குவார் செம்படாக் (Guar Chempedak) |
அப்துல் ரகுமான் இசுமாயில் (Ku Abd Rahman Ku Ismail) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
N22 | குரூண் (Gurun) |
காலி |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)