ஜெரி அல் சமீர்
جري السمر | |
---|---|
ஆள்கூறுகள்: 25°25′05″N 51°21′44″E / 25.41795°N 51.36215°E | |
நாடு | ![]() |
கத்தார் நகராட்சி | உம் சலால் |
கத்தாரின் மண்டலங்கள் | 71-ஆம் மண்டலம் |
District no. | 147 |
பரப்பளவு | |
• மொத்தம் | 10.8 km2 (4.2 sq mi) |
ஜெரி அல் சமீர் (Jeri Al Samir) ( அரபு மொழி: جري السمر, romanized: Jarī as Sāmir ; ஜெரி அல் சம்மர் மற்றும் ஜெரி அல் சமூர் என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது கத்தாரில் உள்ள உம் சலால் நகராட்சியில் உள்ள ஒரு கிராமம். இது அல் ரயான் நகராட்சியின் எல்லைக்கு அருகில் நகராட்சியின் மத்திய-தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.
ஜெரி என்பது கேரி என்ற அரபு வார்த்தையிலிருந்து உருவானது. கிடைக்கும் நீரினை ஒருங்கிணைத்து பல்வேறு தாவரங்களின் வளர்ச்சியை எளிதாக்கும் பகுதியைக் குறிக்கிறது. கிராமத்தின் பெயரின் இரண்டாம் பகுதி, சமீர், என்பது அங்கு வசித்த ஒரு முக்கிய நபரின் பெயர்.
2015 ஆம் ஆண்டில், பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைச்சகம் கியூ ஆர் 331 மில்லியன் செலவில் கிராமத்தில் ஒரு தளவாட மையத்தை உருவாக்கத் தொடங்குவதாக அறிவித்தது. [2] சுற்றுப்பாதை நெடுஞ்சாலைக்கு அருகில் அதன் சிறப்பான அமைவிடம் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த செயல்பாட்டு செலவுகள் காரணமாக இந்தப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது.[3] முழுமையாக பணிகள் முடிந்ததும், சரக்குப் போக்குவரத்து மையம் வாகன உதிரிபாகங்கள் மற்றும் இயந்திரங்கள், உணவு மற்றும் பானங்கள், கிடங்கு மற்றும் சேமிப்பு மற்றும் கட்டுமானத் துறைகளில் 21 நிறுவனங்களுக்கு வசதிகளை வழங்கும். [4]
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)