நகுலபதி சீனிவாச சக்ரவர்த்தி (Nagulapati Srinivasa Chekravarthy) ஜே. டி. சக்ரவர்த்தி என்று தொழில் ரீதியாக அழைக்கப்படும் இவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் தென்னிந்திய திரையுலகிலும் பாலிவுட்டிலும் பணியாற்றியுள்ளார் .[1][2] ராம் கோபால் வர்மா இயக்கிய தெலுங்குத் திரைப்படமான சிவா என்ற அதிரடித் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சக்ரவர்த்தி அறிமுகமானார். இந்தத் திரைபப்டம் இந்தியாவின் 13 வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது .[3] பின்னர் சிவா (1990) என்ற அதே பெயரில் படத்தின் மீளுருவாக்கத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் இவர் 1998 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய பனோரமா பிரிவில் திரையிடப்பட்ட திரைப்படமான சத்யாவில் நடித்தார். அந்தத் திரைப்படம் சிஎன்என்-ஐபிஎன்னின் 100 சிறந்த இந்திய திரைப்படங்களில் பட்டியலிடப்பட்டது.,[4][5] இப்படத்தில் இவர் பணியாற்றியதற்காக திரை விருது நிகழ்வில் நடுவர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[6][7][8]
தெலுங்கு, இந்தி மற்றும் சில தமிழ், மற்றும் மலையாளம் உள்ளிட்ட எழுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சக்ரவர்த்தி நடித்துள்ளார். நெட்டி சித்தார்த்தா (1990), மணி (1993), மணி மணி (1995), ஒன் பை டூ (1993), குலாபி (1996) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். மேலும் இவர் மாநில அரசின் நந்தி விருதினைப் பெற்றார்.[6][7][8][9] அனகனாக ஒக ரோஜு (1997), எகிரே பாவுரமா (1997), நேனு பிரேமிஸ்தா (1997), வொய்ஃப் ஆஃப் வி. வரபிரசாத் ( 1998), பிரேமகு வேலயாரா (1999), பேப் நா பிரணம் ( 2000), கண்ணடத்தில் முத்தமிட்டால் (2002), பிரேமகு ஸ்வகதம் (2002), மத்தியனம் ஹத்யா (2004), துபாய் சீனு (2007), ஹோமாம் (2008), சித்தம் (2009), ஜோஷ் (2009), சர்வம் (2009), சமர் (2013), அரிமா நம்பி (2014), ஐஸ்கிரீம் 2 (2014), பாஸ்கர் தி ராஸ்கல் (2016) மற்றும் ஷிகாமணி (2016).[10][11] ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
சுஸ்திதா சென், பூத் ரிட்டர்ன்ஸ், மனிஷா கொய்ராலா, மற்றும் ஆக் ஆகியோருடன் வாஸ்து சாஸ்திரம் போன்ற இந்தி படங்களிலும் இவர் நடித்துள்ளார் .
சக்ரவர்த்தியின் தாயார் கர்நாடக பாடகரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான டாக்டர் கோவேலா சாந்தா ஆவார். இவரது தந்தை சூர்யநாராயண ராவ் நகுலபதி. இவர் இந்தியாவின் ஹைதராபாத்தில் பிறந்தார். செயின்ட் ஜார்ஜ் இலக்கணப் பள்ளியில் (ஹைதராபாத்) தனது பள்ளிப் படிப்பை கற்றார். சைதன்யா பாரதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இளங்கலைப் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றார்.[12][13] ஆகஸ்ட் 18, 2016 அன்று, லக்னோவைச் சேர்ந்த அனுக்ரிதி கோவிந்த் சர்மாவை இவர் திருமணம் செய்து கொண்டார்.[14][15]
இவர் 1989 ஆம் ஆண்டில் ராம் கோபால் வர்மாவின் முதல் தெலுங்குத் திரைப்படமான சிவாவில் அறிமுகமானார், அதே ஆண்டில் மலையாள திரைப்படமான என்னோடிஷ்டம் குடமோவில் நடித்தார். ராம் கோபால் வர்மாவின் தயாரிப்பில் இவரின் முதல் இந்தித் திரைப்படமான சத்யா , ஜூலை 3, 1998 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. சத்யா விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.