தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஜேசன் நீல் கில்லெஸ்பி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 19 ஏப்ரல் 1975 சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | டிஸ்சி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.95 m (6 அடி 5 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை விரைவு வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 370) | 29 நவம்பர் 1996 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 16 ஏப்ரல் 2006 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 127) | 30 ஆகஸ்ட் 1996 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 12 சூலை 2005 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 4 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே இ20ப (தொப்பி 12) | 13 சூன் 2005 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1994–2008 | தென் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2006–2007 | யார்க்சயர் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008 | கிளாமோர்கன் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக் இன்போ, 10 டிசம்பர் 2018 |
ஜேசன் நீல் கில்லெஸ்பி (Jason Neil Gillespie பிறப்பு: ஏப்ரல் 19, 1975) ஓர் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார்.இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.
வலதுகை விரைவு வீச்சாளரான இவர் 71 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1,218 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக இருதிவரை ஆட்டமிழக்காமல் 201* எடுத்துள்ளார். பந்துவீச்சில் 259 இழப்புகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 5 இழப்புகளை 8 முறை கைப்பற்றியுள்ளார். இவரது பந்துவீச்சு சராசரி 26.13 ஆகும். 97 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 201 ஓட்டங்களை 12.56 எனும் சராசரியில் எடுத்துள்ள இவரது அதிகபட்ச ஓட்டம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 44* ஓட்டங்கள் எடுத்தது ஆகும். பந்துவீச்சில் 142 இழப்புகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 5 இழப்புகளை 3 முறை கைப்பற்றியுள்ளார். இவரது பந்துவீச்சு சராசரி 25.42 ஆகும். மேலும் இவர் 189 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 192 பட்டியல் அ போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
ஆகஸ்ட் 1996 இல் கொழும்பில் இலங்கைக்கு எதிராக கில்லெஸ்பி தனது ஒருநாள் சர்வதேச அறிமுகத்தையும், நவம்பர் 1996 இல் சிட்னியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போடியிலும் அறிமுகமானார். அவர் முதல் தரத் துடுப்பாட்டத்தில் தெற்கு ஆஸ்திரேலியா, யார்க்ஷயர் மற்றும் கிளாமோர்கனுக்காகவும் விளையாடினார்,[1]
பிப்ரவரி 29, 2008 அன்று, கில்லெஸ்பி ஆஸ்திரேலியாவில் முதல் தரத் துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர் அகமதாபாத் ராக்கெட்ஸ் துடுப்பாட்ட அணிக்காக அங்கீகரிக்கப்படாத இந்திய கிரிக்கெட் லீக்கில் விளையாடினார்.[2][3] 2008 ஆங்கில உள்நாட்டு துடுப்பாட்டத் தொடரின் முடிவில் அவர் அனைத்து முதல் தரத் துடுப்பாட்டத்தில் இருந்தும் ஓய்வு பெற்றார்.[4]
ஜேசன் கில்லெஸ்பி தொல்குடி ஆத்திரேலியர்களின் கமிலாரோய் மக்களின் வம்சாவளியினைச் சேர்ந்தவர் ஆவார். இதன் மூலம் தேர்வுத் துடுப்பாட்ட வீரராக ஆன முதல் தொல்குடியின நபர் ஆவார்.[2][5] இவரது தாய் கிரேக்க வம்சாவளியினச் சேர்ந்தவர் ஆவார். ஜேசன் மூன்று குழந்தைகளில் மூத்தவர் ஆவார். அவர் தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள கப்ரா டொமினிகன் கல்லூரியில் பயின்றார். கில்லெஸ்பி 2003 இல் அண்ணா என்பவரை (நீ மெக்வோய்) மணந்தார். இந்தத் தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்: ஜாக்சன் (பிறப்பு பிப்ரவரி 2006), பிராண்டன் (பிறப்பு அக்டோபர் 2007), கிங்ஸ்டன் (பிறந்த தேதி தெரியவில்லை) [6] மற்றும் மகள் டெலானி, நவம்பர் 2012 யார்க்ஷயரில் பிறந்தார்.[7] கில்லெஸ்பியின் முதல் திருமணத்தின் மூலம் சபையர் (பிறப்பு மார்ச் 1995) என்ற மற்றொரு மகள் உள்ளார்.[8]
2007/08 ஆம் ஆண்டில் டாஸ்மேனியாத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான புரா கோப்பை போட்டியில் கில்லெஸ்பி தனது முதல் நூறு ஓடங்களை எடுத்தார். 190 ஓட்டங்கள் எடுத்த தென் ஆஸ்திரேலிய இழப்புக் கவனிப்பாளர் கிரஹாம் மனோவுடன் 250 ஓட்டங்கள் இணைந்து எடுத்தார். அந்தப் போட்டியில் இவர் மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 118* ஓட்டங்களை எடுத்தார்.
ஆகஸ்ட் 2010 இல் ஜிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு கில்லெஸ்பி பயிற்சியாளராக ஆனார். அவர் பெரும்பான்மையாக மிட்வெஸ்ட் ரைனோஸ் துடுப்பாட்ட அணியுடன் பணியாற்றினார்.[9]