ஜேனட் ரொனால்ட்சு

ஜேனட் ரொனால்ட்சு
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜேனட் எலிசபெத் ரொனால்ட்சு
பிறப்பு30 அக்டோபர் 1985 (1985-10-30) (அகவை 39)
வராகுல், விக்டோரியா, ஆத்திரேலியா
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது எதிர்ச்சுழல்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி 8)26 சூன் 2019 எ. இசுக்காட்லாந்து
கடைசி இ20ப3 சூலை 2022 எ. நமீபியா
இ20ப சட்டை எண்36
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2018–மியூனிக்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெண்கள் இருபது20
ஆட்டங்கள் 32
ஓட்டங்கள் 584
மட்டையாட்ட சராசரி 26.54
100கள்/50கள் 1/2
அதியுயர் ஓட்டம் 105*
வீசிய பந்துகள் 50
வீழ்த்தல்கள் 2
பந்துவீச்சு சராசரி 31.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 2/5
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
19/–
மூலம்: Cricinfo, 18 November 2022

ஜேனட் எலிசபெத் ரொனால்ட்சு (Janet Elizabeth Ronalds, பிறப்பு: அக்டோபர் 30, 1985) ஆத்திரேலியாவில் பிறந்த உடலியக்க மருத்துவரும், பன்முகத் துடுப்பாட்ட வீரரும் ஆவார். இவர் ஜெர்மனி பெண்கள் தேசிய துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார். பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டியில் ஜெர்மனிக்காக சதம் அடித்த முதல் வீரர் ( ஆண்/பெண் ) இவர்தான்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

ஜேனட் ரொனால்ட்சு ஆத்திரேலியாவிலுள்ள விக்டோரியாவின் வாரகுல் என்ற ஊரில் பிறந்தார்.[1] 2007 இல் மெல்போர்ண் பல்கலைக்கழகத்தில் உடலியக்க மருத்துவத்தில் இளங்கலை முடித்தார். 2008 இல் மெல்போர்ணில் தனது உடலியக்க மருத்துவத் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, இவர் 2011 மற்றும் 2016 க்கு இடையில் இங்கிலாந்தில் பணியாற்றினார். 2018 முதல், இவர் ஜெர்மனியின் மியூனிக்கில் வசித்து வருகிறார்.[2]

சர்வதேச வாழ்க்கை

[தொகு]

சூன் 26, 2019 அன்று, ஐரோப்பாவில் 2019இல் நடந்த சர்வதேச மகளிர் துடுப்பாட்டத் தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இசுக்கொட்லாந்திற்கு எதிராக பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அறிமுகமானார்.[3][4]

பிப்ரவரி 2020 இல், மஸ்கட்டில் உள்ள அல் அமெரட் துடுப்பாட விளையாட்டு மைதானத்தில் ஜெர்மனிக்கும் ஓமனுக்கும் இடையிலான இருதரப்புத் தொடரின் முதல் பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டியில், ஒட்டுமொத்த 158 ஓட்டங்களில் இவர் கிறிஸ்டினா கோஃப் என்பவருடன் சேர்ந்து 71 * ஓட்டங்களை எடுத்தார். இப்போட்டியில் 115 ஓட்டத்தில் வித்தியாசத்தில் ஜெர்மனி அணியின் முதல் வெற்றியாகும்.[5] தொடரின் மூன்றாவது போட்டியில், இவர் 47 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இறுதியில் ஜெர்மனி பெண்கள் பன்னாட்டு இருபது20 தொடரை 4-0 என வென்றது. மேலும் தொடரின் நாயகியாகவும் ரொனால்ட்சு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]

13 ஆகஸ்ட் 2020 அன்று, ஜெர்மனிக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையே சீபார்ன் துடுப்பாட்ட மைதானத்தில் நடந்த மற்றொரு இருதரப்பு தொடரின் இரண்டாவது இருபது20 போட்டியில், ஜெர்மனிக்காக சதம் அடித்த முதல் ஆண் அல்லது பெண் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்.[7] இவர் 74 பந்துகளில் 105 * ஓட்டங்களை எடுத்தார். மேலும் கோஃப் உடன் சேர்ந்து 191 ஓட்டங்கள் எடுத்தார்.[7][8][9][10] அடுத்த நாள் நடந்த, இருதரப்புத் தொடரின் நான்காவது போட்டியில், ரொனால்ட்சு 68* ஓட்டங்களை எடுத்தார். மேலும் கோஃப் உடன் இணைந்து 198/0 என்ற குழுவின் எண்ணிக்கையை அதிகரித்தார். இது முந்தைய நாள் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது.[8][9][10]

ஜெர்மனியின் அடுத்த இருதரப்புத் தொடரில், பிரான்சுக்கு எதிராக கிரெஃபெல்டில் உள்ள பேயர் உர்டிங்கன் துடுப்பாட்ட மைதானத்தில், ஜூலை 2021 இல், ரொனால்ட்சு ஐந்து போட்டிகளில் நான்கில் விளையாடினார். மூன்றாவது போட்டியில், இவர் 31 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்து போட்டியிலும் தொடரிலும் அதிக ஓட்டங்கள் எடுத்தார். மேலும் ஆட்டநாயகி விருதும் பெற்றார்.[11][12][13] அடுத்த மாதம், ஐரோப்பாவில் நடந்த 2021 பன்னாட்டு மகளிர் இருபது20 உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் ஜெர்மனியின் நான்கு போட்டிகளிலும் விளையாடினார்.[14]

மேற்கோளகள்

[தொகு]
  1. "Janet Ronalds". ESPNcricinfo. ESPN Inc. பார்க்கப்பட்ட நாள் 14 February 2021.
  2. "Janet Ronalds". லிங்டின். பார்க்கப்பட்ட நாள் 14 February 2021.
  3. "Janet Ronalds". ESPN Inc. பார்க்கப்பட்ட நாள் 14 February 2021.
  4. "Scotland register massive win over debutant Germany". Archived from the original on 27 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 27 June 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Deutschland gewinnt erstes T20i Länderspiel gegen Oman" (in ஜெர்மன்). 4 February 2020. பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.
  6. "Frauennationalmannschaft erfolgreich im Oman" (in ஜெர்மன்). 25 February 2020. பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.
  7. 7.0 7.1 Grunshaw, Tom (13 August 2020). "Ronalds, Bargna smash records as Germany beat Austria by 138 runs". பார்க்கப்பட்ட நாள் 20 February 2021.
  8. 8.0 8.1 "Deutsche Frauennationalmannschaft im Rekordfieber!". 14 August 2020. பார்க்கப்பட்ட நாள் 14 February 2021.
  9. 9.0 9.1 "Record-breaking Germany complete whitewash of Austria". பார்க்கப்பட்ட நாள் 14 February 2021.
  10. 10.0 10.1 Mohanan, Shajin (17 August 2020). "Austria v Germany: A lookback at the record-breaking series". பார்க்கப்பட்ட நாள் 15 February 2021.
  11. Women's CricZone Staff (10 July 2021). "Anuradha Doddaballapur bowls Germany to series win over France". பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
  12. Emerging Cricket (12 July 2021). "Global Game: Germany's unbeaten run in T20Is extended after 5-0 series sweep against France". பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
  13. "5:0 gegen Frankreich: Golden Eagles bleiben unbesiegbar". 13 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
  14. "ICC Women's T20 World Cup Europe Region Qualifier, 2021 Cricket Team Records & Stats | ESPNcricinfo.com". பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]