ஜேன்ஸ் டிஃபன்ஸ் வீக்லி என்னும் கிழமைதோறும் வெளியாகும் பன்னாடுகளின் படைத் துறைகளின் செய்திகளையும் கருவிகள், அது பற்றிய தொழில்கள் பற்றிய கருத்துக்களையும் வெளியிடும் ஓர் ஆங்கில இதழ் ஆகும். ஜான் எஃவ். டி. ஜேன் என்னும் ஆங்கிலேயரின் பெயரால் தொடங்கப்பட்டது இவ்விதழ். இவர் 1898ல் போர்க்கப்பல்கள் பற்றிய ஜேன்ஸ் ஆல் த வோர்ல்ட்ஸ் ஃபைட்டிங் ஷிப்ஸ் (e's All the World's Fighting Ships) என்னும் இதழைத் தொடங்கினார். ஜேன்ஸ் டிஃபன்ஸ் வீக்லி என்னும் இதழ் ஜேன்ஸ் இன்ஃபர்மேஷன் குரூப் (ஜேனின் தகவல் குழு) என்னும் குழுவின் ஓர் உறுப்பு. இது தற்பொழுது வுட்பிரிட்ஜ் கம்பனி (Woodbridge Company.) என்னும் நிறுவனத்தைச் சேர்ந்தது.
இந்த ஆங்கில இதழுக்குப் போட்டியாக இத்துறையில் இருக்கும் மற்ற இதழ்கள்:
இந்த இதழ் ஒரு முறை (1985ல்) ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த சாமுவேல் லோரிங் மோரிசன் (Samuel Loring Morison) என்னும் உளவாய்வாளரால் கட்டுமான நிலையில் இருந்த உருசியாவின் வானூர்தித் தாங்கிக் கப்பலைப் பற்றிய ஒளிப்படங்களை செயற்கைமதி வழி பெற்ற ஒளிப்படங்களை (KH-11) அம்பலப்படுத்தியதால் கெட்ட வகையான பரவலம் அடைந்தது. அன்று லியோனிட் பிரெஷ்னேவ் (Leonid Brezhnev) என்று அழைக்கப்ப்ட்ட வானூர்தித் தாங்கு கப்பல் இன்று அட்மிரல் குஸ்நெட்சோவ் (Admiral Kuznetsov) என்று அழைக்கப்படுகின்றது.[1]